ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்கப்போகின் றோம் என்பதில் இறுதி முடிவு எடுக்கவில்லை. இருவேட்பாளர்களும் பௌத்த கொள்கையினை காப்பாற்ற என்ன செய்யப்போகின்றார்கள் என்பதைப் பொறுத்தே பொதுபலசேனா
முடிவெடுக்கும் என தெரிவிக்கும் கலகொட அத்தே ஞானசார தேரர் மஹிந்த ராஜபக்ஷ மைத்திரிபால இருவருடனும் பேசுவோம் எனவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் பொதுபலசேனா எவ்வாறான முடிவுகளை எடுக்கப் போகின்றது என்பதை வினவிய போதே பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்;
ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெறப் போகின்றனர். நாங்கள் யாரை ஆதரிக்கப் போகின்றோம் என்பது தொடர்பில் இதுவரையில் நாங்கள் தீர்மானம் எதையும் எடுக்கவில்லை. எனினும் எங்களிடம் கொள்கைத் திட்டம் உள்ளது. பௌத்த சிங்கள கொள்கையினையும் பௌத்த சாசனத்தினையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சிறந்த தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டியுள்ளது.
ஜனாதிபதியா மீண்டும் மஹிந்த ராஜபக் அல்லது புதிய தலைவராக மைதிரிபால சிறிசேன வரப்போகின்றாரா என்பதை விடவும் இவர்கள் இருவரும் பௌத்த கொள்கையினை காப்பாற்ற என்ன செய்யப் போகின்றனர் என்பதே முக்கியமானது.
பௌத்த சாசனத்தினை பாதுகாப்பதற்கான நிகழ்ச்சித் திட்டம் எம்மிடம் உள்ளது. அதை இந்த அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல் இரு வேட்பாளர்களிலும் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனத்தினைப் பொருத்தே தாம் தீர்மானம் எடுக்க வேண்டும் . இப்போது நாங்கள் அவசரப்படுவதனால் எந்தவித சாதக முடிவுகளும் ஏற்படக் போவதில்லை.
மேலும் நாங்கள் பௌத்த கொள்கையின் அடிப்படையில் செயற்படும் அமைப்பினர் . எமக்கு பௌத்த சிங்கள மக்களின் ஆதரவு இருக்கின்றது. எனவே நாங்கள் நாட்டிற்கும் மக்களுக்கும் சாதகமான வகையிலேயே முடிவுகளை எடுப்போம். எவை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜ பக் ஷ மற்றும் மைதிரிபால சிறிசேன ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளோம். இரு தரப்புடனும் பேசி நாட்டிற்கு சாதகம் எதுவோ அந்த முடிவினை எடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment