ஹஜ் யாத்திரையை விமர்சித்த வங்க தேசத்தின் முன்னாள் அமைச்சர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார் ஆண்டுதோரும் பல லட்சம் பேர் ஹஜ் யாத்திரையை மேற்கொள்கின்றனர் அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றிந்த சமயத்தில், அப்துல் லத்தீப் சித்திக்கி என்ற அந்த நபர், தான் ஹஜ் யாத்திரையை முற்றாக எதிர்ப்பதாகவும், முகமது நபி வணிக நோக்கத்தையும் கருத்தில் கொண்டுதான் இந்தப் பழக்கத்தை தோற்றுவித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அவர் அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டார். தற்போது நாடு திரும்பிய அவர் காவல்துறையிடம் சரணடைந்த பிறகு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது இதுவரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. இவருக்கு எதிராக இஸ்லாமிய கட்சிகள் நாடு தழுவிய பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
ஹஜ் பயணம் மேற்கொள்வது இஸ்லாமியர்களின் கடமையாக கருதப்படுகிறது. ஆண்டுதோரும் பல லட்சம் பேர் மெக்காவுக்கு யாத்திரை மேற்கொள்கின்றனர்.BBC
.jpg)
0 comments :
Post a Comment