ஸிறாஜ் ஏ.மனீஹா-
நூலக வாரத்தை முன்னிட்டு ஒலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலய நூலகத்திற்கு ஐயாயிரம் ரூபா பெறுமதியான ஒரு தொகுதி நூல்களை இலவசமாக கையளிககும் நிகழ்வு பாடசாலையின் நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.கஸ்ஸாலி பிரதம அதிதியாகவும்,பிரதி அதிபர்களான ஏ.எல்.எம்.யாசின்,எஸ்.ஆதம்பாவா,உயர்தரப்பிரிவு வலயத்தலைவரும் நூலக பொறுப்பாசிரியருமான அஷ்ஷெய்க் யு.கே.றஹிம்(நழீமி),ஐ.ஏ.ஜூமான் ஆசிரியர் உட்பட மணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நூல்களை பாடசாலையின் பழைய மாணவரும் இலங்கை துறைமுக அதிகார சபையின் உத்தியோகத்தருமான எஸ்.எம்.பசீலினால்; அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
0 comments :
Post a Comment