குரலாகி கவிதை ஒலி, ஒளி இறுவட்டு வெளியிடடு விழா!

 லங்கை வரலாற்றில் முதன்முறையாக குரலாகி எனும் கவிதை ஒலி, ஒளி இறுவட்டு வெளியிடப்படவுள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளரும் கவிஞருமான சாய்ந்தமருது எஸ். ஜனூஸ் எழுதிய கவிதைகள் இலங்கையில் பிரபல அறிவிப்பாளர்களின் குரல்களில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குரலாகி இறுவட்டு வெளியீட்டு விழா எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. மணிப்புலவர் மருதூர் ஏ. மஜித் தலைமயைில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துகொள்வார். இந்நிகழ்வுக்கு அஷ்ஷெய் அப்துல் காதர் மசூர் மெளலானா முன்னிலை வகிக்கிறார்.

கெளரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ் பாருக், எம்.எஸ்.எம். அஸ்லம், கிழக்கு மாகாணசபை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஜீட், வடமேல் மாகாணசபை உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்ஷா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

சிறப்பு அதிதிகளாக கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப், நீதி அமைச்சின் இணைப்புச் செயலாளர் அப்துல் ரஹ்மத் மன்சூர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் வை.எல்.எஸ். ஹமீட் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் ஆகியோருடன் விசேட விருந்தினர்கள் மற்றும் பல்துறைசார் கலைஞர்கள், பிரமுகர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இறுவட்டின் முதற்பிரதியை தொழிலதிபர் அல்ஹாஜ் எம்.எம். சப்ரி பெற்றுக்கொள்வார். நிகழ்ச்சியை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளர்கள் அஹமட் எம். நஸீர் மற்றும் அனுஷா மொறாயஸ் ஆகியோர் தொகுத்து வழங்குவர். துருவம் மற்றும் தமிழ் விருட்சம் என்பன இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :