இலங்கையில் காட்டுச் சட்டம் நடைமுறையில் உள்ளது-அரியநேத்திரன்

நாட்டில் காட்டுச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் குற்றம்சாட்டியுள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், சட்டம் பற்றி இன்று பேசப்படுகின்றது.எனினும் அரசாங்கத்தின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டத்தை பின்பற்றுவதில்லை. 

இவ்வாறான ஓர் நிலைமையில் மக்களை எவ்வாறு சட்டத்தை மதிப்பவர்களாக மாற்ற முடியும்?

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏன் இந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது. தமிழ் மக்களின் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்படுகின்றன.

சிறுபான்மை மக்களுக்கு ஒரு சட்டமும் பெரும்பான்மை மக்களுக்கு மற்றுமொரு சட்டமும் அமுல்படுத்தப்படுகின்றது. 

இவ்வாறான இரட்டை நிலைப்பாடு நாட்டில் மீளவும் பிரச்சினைகளை கிளர்ச்சிகளை உருவாக்க வழியமைக்கும் என அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :