கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன ஊடகவியலாளர் மாநாட்டில்!

அஷ்ரப் ஏ.சமத்-


னாதிபதியின் யோசனையின் இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் போது 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் நிதியை  500 ருபாவில் இருந்து 1500 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதுவரை காலமும் இப் புலமைப்பரிசில் 
15 ஆயிரம் மாணவர்களுக்கே வழங்கப்பட்டு வந்தது. 

2015ஆம் ஆண்டில் ;இருந்து 25ஆயிரம் மாணவர்களுக்கு  வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கான புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி  157ஆகும். 

'நாடுமுழுவதிலும் 1000 மஹிந்ததோய பாடசாலைகள் அபிpருத்தித் திட்டத்தின் கீழ் இதுவரை 856 பாடசாலைகளில்  2மாடிகளைக் கொண்ட மஹிந்தோதய தொழில் கூட கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் டிசம்பர் 
31க்கு முன் தொகை தொகையாக இந்த கட்டிடங்கள் ஜனாதிபதி மற்றும் கல்வியமைச்சும் இணைந்து திறந்து வைக்கப்பட  உள்ளதாக கல்வியமைமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இன்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். ஏதிர்வரும் சனிக்கிழமை கல்வியமைச்சின் வரவுசெலவுத்திட்டம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதை முன்ணிட்டு அமைச்சின் முன்னேற்ற திட்டங்கள் பற்றி இங்கு ஊடகவியலாளர்களுக்கு 
தெரிவிக்கப்பட்டது

அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில் - 

நாடுமுழுவதிலும் 'லமா மித்ரு' 6500 பாடசாலைகள் கல்வியமைச்சினால் திறந்து  வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு 'யுணிசப்' திட்டம் உதவி வழங்கியது. இதில் வடக்கு கிழக்கு மாகாணத்தில்  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் புனர்வாழ்வு அளிக்கப் பட்டசிறுவர்களுக்காக 1500 பாடசாலைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இதனை விட பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 5000 பாடசாலைகளுக்கு மலசல கூடங்கள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை விட ஜனாதிபதி செயலகத்தினால் ஜனாதிபதி செயலாளர் தலைமையில் 1550 பாடசாலைகளுக்கு மொழிகள் கற்கும் கூடமும் 20 கணனிகள் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

தற்பொழுது 50 பாடசாலைகளில் மொழிகள் கூடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதனை விட ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவில் 3 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதில் கனணி இல்லாத பாடாசலைகளுக்கு 40 கணனிகள் மற்றும் மொழி கூடம், நனசல முலம் ருபாவாஹினி, லேக் ஹவுஸ் பத்திரிகை ஊடாக ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. 

அத்துடன் விஞ்ஞான கூடமும்  நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இந்த நாட்டில் உள்ள 40 இலட்சம் மாணவர்களும் க.பொ. சாதாரண தரம் அல்லது 
உயர் தரம் கற்று வெளியேறும்போது அம் மாணவனுக்கு விடுகைப்பத்திரத்துடன் ' என்.வி.கியு சான்றிதழ்  வழங்கப்பட்டு வருகின்றது. 

இம் மாணவர்களுக்காக அமைச்சர் டலகஸ் அழகப்பெரும அவர்களின் அமைச்சின் ஊடகா 25 மாவட்டங்களிலும்  நிர்மாணிக்கப்பட்டுள்ள தெழில்நுட்பக் பயிற்சி நிலையத்தில் உயர்தர டிப்ளோமா, டிப்ளோம 
தொழில்பயிற்சி வழங்கப்படும். 

மகரகமவில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களளை ஒரே தரத்தில் 500 பேரை  ஆசிரியராக ஆக்குவதற்கு ஆசிரிய பல்கலைக்கழகமொன்று டிசம்பரில் திறந்து வைக்கப்பட்டு ஜனவரியில் 
ஆசிரிய பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்படும்.

கல்விக்கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஆசிரியர்களுக்கு 4 வருடத்தில் டிப்ளோமா சான்றிதழை  விடுத்து அவர்களுக்கு பட்டப்படிப்பு ஆசிரியர் சான்றிதழ் வழங்கப்படும். இம்முறை உயர்பதரப் பரீட்சையின் 
போது மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தை வடக்கு மாகாணமும் இரண்டாம் இடத்தை சப்ரகமுவ மாகாணமும் முன்றாம் இடத்தை 
கிழக்குமாகாணமும் பெற்றுள்ளது. ஆறாவது இடத்தையே மேல்மாகாணம் பெற்றுள்ளது. 

அண்மையில் கிளிநொச்சியில் பாடசாலைக்குச் சென்ற ஜனாதிபதி அங்கு ஒரு மாணவி சிறப்பாக சிங்களத்தில்  உரையாற்றினார். அவரை ஜனாதிபதி கூப்பிட்டு நன்றக சிங்கள பேசுகின்றீர் என விசாரித்தபோது அவர் மட்க்குழியில் பிறந்து ஆரம்பக் கல்வி கற்று சிறந்த கல்வியைப் பயில கிளிநொச்சி பாடசாலைக்கு வந்து  சேர்ந்து கொண்டதாக தெரிவித்தார். ஆகவே மேல் மாகாணத்தினை விட வடக்கில் சிறந்த கல்வி கனணி கல்வி மற்றும்  வசதிகள் தாராளமாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :