புல்மோட்டை நாகலென் ரஜமகா விகாரையில் ஜனாதிபதி அவர்களுக்கு போதிபூசை வழிபாட்டு நிகழ்வு!

த.நவோஜ்-
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புல்மோட்டையில்; அமைந்துள்ள நாகலென் ரஜமகா விகாரையில் நாட்டின் ஜனாதிபதி மேதகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி திங்கட்கிழமை இரவு அரிசிமலை விகாராதிபதி பணாமுரே திலகவன்ச தேரர்; தலைமையில் விஷேட போதிபூசை வழிபாட்டு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சுசந்த புஞ்சிநிலமே, குச்சவெளி பிரதேச செயலாளர் மா.தயாபரன், கலாசார உத்தியோகத்தர் ஆர்.எம்.எஸ்.பியசேகர, இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் நே.பிருந்தாபன், புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், புல்மோட்டை கிராம உத்தியோத்தர்களான எஸ்.ரினோஸ், எஸ்.எம்.தாஜுதீன், எஸ்.ஹசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :