வசந்த சேனாநயாக்க எம்.பி அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சி வரிசையில் அமரவுள்ளார்!

அஷ்ரப் ஏ சமத்-

ளும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்ணனியின் கம்பஹா மாவட்டத்தின் பாராளுமன்ற  உறுப்பிணர் வசந்த சேனாநயாக்க அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சி வரிசையில்  அமர இருப்பதாக தெரிவித்துள்ளார். இவர் முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின்  பேரனும் ஆவார். கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது ஜக்கிய மக்கள் சுதந்திர  முன்ணியின் போட்டியிட்டு கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணராக  தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

3வது வரவு செலவுத் திட்டத்தின் வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்கவும்  அரசுக்கு எதிரான உரையொன்றை பாராளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார். இன்று அவரது மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்த சகல தஜ்வவேஜூகளையும்  அகற்றி தமது அலுவலகத்தை விட்டு வெளியேறியுள்ளார். கடந்த வாரம் சிரச தொலைக்காட்சியில்  செய்தியில் நேரடியாக அரசை விமர்சித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :