சற்று முன் ஆளும் தரப்பு எம் பி அஸ்வர் தமது பாரளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது அரசங்கத்தின் நிகழ்ச்சி நிரல் எனவும் இது அமைச்சர் ரிசாத் பதியுத்தீனை திருப்திபடுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என ஐக்கிய தேசிய கட்சி மேல் மாகாண சபை ஊறுப்பினர் எம் எஸ் எம் பைரூஸ் ஹாஜியார் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பசில் ராஜபக்ஷவின் செல்லப்பிள்ளையான அமைச்சர் ரிசாத் அவர்களின் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு கூட்டத்தில் அரசங்கத்தை தம் பக்கம் திரும்பிபார்க்க வைக்கவும் அரசாங்கத்துக்கு அழுத்தத்தை கொடுக்கவும் அக்கட்சியின் மூன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்க முடிவெடுத்தனர்.இது முஸ்லீம்களுக்காக எடுத்த முடிவு என எமது அப்பாவி முஸ்லீம்கள் தப்புக்கணக்கு போட்டிருந்தனர்.
அமைச்சர் ரிசாத் தனது கட்சி உறுப்பினரான அமீர் அலிக்கு அமைச்சு பதவி வேண்டும் இல்லாவிட்டால் தனது கட்சி அரசைவிட்டு வெளியேரப்போவதாக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்ததை தொடர்ந்து இந்த மிரட்டலுக்கு பயந்த அரசாங்கம் ரிசாத்தை திருப்திபடுத்த எடுத்த நடவடிக்கையே அமீரலிக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி எனவும் ஐக்கிய தேசிய கட்சி மேல் மாகாண சபை ஊறுப்பினர் எம் எஸ் எம் பைரூஸ் ஹாஜியார் குறிப்பிட்டுள்ளார்.
தமது சுயநலங்களை முன்னிறுத்தி செயற்படும் ரிசாத் மற்றும் அவரது கூட்டணியின் உணமையான முகத்தையும் எல்லோரினதும் உள்ளங்களை அறிந்த அல்லாஹ் இந்த புனிதமான வெள்ளிக்கிழமை நாளில் முழு உலகத்துகதுக்கமே வெளிச்சமிட்டு காட்டிவிட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தமது இருப்பை பாதுகாக்க மக்கள் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ள அமைச்சர் ரிஷாத் கூட்டணியின் இருப்பை முஸ்லீம் சமூகம் எதிர்காலத்தில் கேள்விக்குறியாக்குவது இன்று நிச்சயக்கப்பட்டுவிட்டது....
தமது பிரதி அமைச்சு பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் பாரிய சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பிரதி தபால் அமைச்சர் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

0 comments :
Post a Comment