அக்கூட்டத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உரையாடிக்கொண்டிருக்கின்றபோது அதனை ஒலிப்பதிவு செய்து வெளியிட்ட துரோகத்தனமான நச்சுப்பாம்பு ஒன்று கட்சிக்குள் உலாவுவதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.
குறிப்பிட்ட ஒலிப்பதிவு இம்போட்மிரருக்கு கிடைத்தது சம்மந்தமாக கேள்வி எழுப்பியபோதே மேற்குறித்த விடையத்தினை கட்சியின் முக்கியஸ்தர் தெரிவித்தார்.
கட்சியின் உயர்பீடங்களில் அதிகமாகப் பேசுவோரில் யார் இந்த திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட ஒலிநாடாவில் பேசவில்லையோ அவர்தான் அந்த திருட்டுத்தனமான, துரோகத்தனத்தை செய்திருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் :
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை தலைவர் சுத்தம் செய்ய வேண்டும் உள்ளே ஏராளமான நச்சு வைரசுக்கள் நிறைந்துள்ளன. புலநாய்வுத்துறையினர் கட்சிக்குள் இருக்கிறார்கள், துரோகிகளும், வியாபாரிகளும், இரட்டைவேடம் போடுபவர்களும் கட்சிக்குள் அதிகரித்து விட்டனர். எனவே தலைவர் தத்துணிவுடன் கட்சியில் இருக்கும் இப்படியான நச்சுப்பாம்புகளை இனம்கண்டு தூக்கி வீசவேண்டும் இல்லை என்றால் தலைவருக்கும் கட்சிக்கும் பெரும் ஆபத்தான நிலமை வந்துவிடும் என்று குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment