ஹுனைஸ் பாரூக்கின் ஊடக அறிக்கை!

அஷ்ரப் ஏ சமத் 
னக்கு எதிராக இட்டுக்கட்டப்பட்டு வெளியிடப்படும் பொய்யான செய்திகளுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்  கொள்கின்றேன். நான் களவில் காணி புடிக்கவில்லை, கள்ளக் கடத்தல் செய்யவில்லை, குடிபோதையில் இருக்கவும் இல்லை, பெண்களை துஷ்பிரயோகம் செய்யவும் இல்லை, முறைகேடாக பணம் சம்பாதிக்கவும் இல்லை,- அரசியல் பழி வாங்கள்கள் யாருக்கும் செய்யவும் இல்லை- எவர் தெழிலுக்கும் மண் அள்ளிப் போடவும் இல்லை, யாருடைய வயிற்றில் அடிக்கவும் இல்லை, என்பதை உறுதியிட்டுச் சொல்லமுடியுமா?? 

கடந்த சில தினங்களாக 'மக்கள் விசனம்' எனும் முகநூலிலும்,srilankamuslim எனும் இணைய  தளங்களினூடாக எனக்குச் சேறு புசுப் படுகின்றது. குறித்த இணையதளங்கள் மற்றும் முகநூலை வாசிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும் இவற்றின் பின்னணியில் யார் இருந்து இதனைச் செயற்படுத்துகின்றார்கள் என்று.கடந்த காலங்களில் பதில் அளிக்கவில்லை என்பதற்காக நினைத்ததையெல்லாம் சொல்ல முடியுமா?

கடந்த சில காலமாக இந்த இட்டுக்கட்டல்கள் பெய்யான செய்திகளைக் கேட்டு மிகவும் மனம் வேதனையடைந்து அல்லாஹ்விடம் பாரப்படுத்தினேன்.இன்னுமின்னும் பொய்யான தகவல்களைக் கூறி என்னை சமுதாயத்திற்கு பிழையாகக் காட்டலாம் என முயற்சிக்கின்றனர். என்னைப்பற்றிப் பிழையான முறையில் கட்சி மாறுவதற்கு பல கோடிகளுக்கு சோரம் போனதாகக் கூறுபவர்களுக்கு ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றேன்.

எதிர் கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு கட்சி மாறிய போது அவர்கள் எத்தனை கோடிக்கள்,என்னென்ன பதவிகளை பெற்றீர்கள் என கேட்பதோடு இவ்வாறு பொய்க்குற்றம் சுமத்துபவர்களுக்கு சவால் ஒன்றை விடுக்கின்றேன். ..'உங்களது குற்றச் சாட்டுக்கள் அத்தனையும் பொய்யென்று அல்லாஹ்விடம் அழிவுச் சத்தியம் செய்ய நான் தயாராக உள்ளேன்!. நீங்கள் தயாரா??'... என கேட்பதோடு உங்களால் என்கெதிராகச் சுமத்தப்படும் குற்றச் சாட்டுக்களை சாட்சியுடன் நிறூபிக்க முடியுமா?.

மேலும் எனக்கு எந்த பைகல் உம் இல்லை என்பதை நான் உறுதியாகச் சொல்வேன்.ஆனால் என்னைப் பற்றிப் பொய்க்குற்றம் சுமத்துபவர்கள் தாங்கள் .....

 களவில் காணி புடிக்கவில்லை,
- கள்ளக் கடத்தல் செய்யவில்லை,
- குடிபோதையில் இருக்கவும் இல்லை
- பெண்களை துஷ்பிரயோகம் செய்யவும் இல்லை
- முறைகேடாக பணம் சம்பாதிக்கவும் இல்லை,
- அரசியல் பழி வாங்கள்கள் யாருக்கும் செய்யவும் இல்லை,
- எவர் தெழிலுக்கும் மண் அள்ளிப் போடவும் இல்லை,
- யாருடைய வயிற்றில் அடிக்கவும் இல்லை,
என்பதை உறுதியிட்டுச் சொல்லமுடியுமா??
ஆனால் என்னால் சொல்ல முடியும்!.

அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் , அற்ப சொற்ப உலக வாழ்க்கையையும் பதவிகளையும் நம்பி மறுமையை மறந்து விடாதீர்கள்.மறுமை நாளில் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் முன்னிலையில் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியை நாடி நிச்சயம் நிற்பேன் என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

நான் முதுகெலும்புள்ள அரசியல் வாதியாக முஸ்லிம்களுக்கும்இ,சிறுபான்மை மக்களுக்கும் எதிரான செயற் பாடுகளுக்கு எதிராக நான் களம் இறங்கியிருக்கின்றேன். சமூகத்திற்காக அரசியல் செய்கின்றேன் என சொல்பவர்கள் அது உண்மையென்றால் உங்கள் சுகபோகங்களை விட்டுவிட்டு சமூகத்திற்காக அரசியல் செய்யத் தயாரா? இதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள்...


'ஒரு முஃமினான மனிதன் செய்யாத குற்றத்தை யார் அவர் மீது சுமத்துகின்றாறோ அவர் பெரும் பாவத்தையும்இ இட்டுக்கட்டையும் சுமந்து கொண்டார்கள்'அல்குர்ஆன்-சூரா- அல்.அஹ்ஸாப்வசனம்- 59

ஹுனைஸ் பாரூக்
பாராளுமன்ற உறுப்பினர்,
வன்னி மாவட்டம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :