எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்திரிபாலசிறிசேனவுக்கு ஆதரவளிக்குமாறு முஸ்லிம் காங்கிரஸிடம் பேஸ்புக்கில் மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தினை சுமார் 42 ஆயிரம்பேர் லைக் செய்துள்ளனர். குறித்த பக்கத்தில் ஜனாதிபதித் தேர்தலில் முகநூல்பாவனையாளர்களின் அபிப்பிராயத்தினை கோரும் வகையில் பதிவொன்றினை வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ்பதிவு செய்துள்ளார்.
குறித்த பதிவில் ' எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடுதொடர்பில் கட்டசியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நாளை மலேசியாவிலிருந்து நாடுதிரும்பியதும் முக்கிய கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.இக்கலந்துரையாடல்களின் பின்னர் கட்சியின் உச்சபீடத்தின் அனுமதியுடன் வேட்புமனுத்தாக்கலுக்கு முன்னதாக முடிவுகள் எட்டப்படலாம் என எதிர்பார்க்கின்றேன்.
எனவே இந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சி எத்தகைய நிலைபாட்டினை எடுக்கவேண்டும் என்ற உங்களின் காத்திரமான கருத்துக்களை இங்கு பதிவு செய்யுமாறுவேண்டுகின்றேன்'. எனக் கோரியுள்ளார். இந்தச் செய்தி பதிவேற்றப்படும் வரை சுமார் 300முகநூல் பாவனையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இவர்களில் 95 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள், ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின்பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனாவை ஆதரவளிக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்மை குறிப்பிடத்தக்கது.
.jpg)
0 comments :
Post a Comment