அறுபத்து மூன்றாவது அகவை காணும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி!

ன்று (2014.11.15) சாய்ந்தமருது ஷலீ மரிடியன்| வரவேற்பு மண்டபத்தில் நடைபெறும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 62ஆவது அங்கத்தவர் பொதுக் கூட்டத்தையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

நாலரை நூற்றாண்டு ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளின் காலனித்துவப் பிடியில் சிக்கியிருந்த இலங்கைத் தாய்நாடு 1948இல் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியது முதல் ஒவ்வோர் இனமும் தத்தமது கலாசாரத்தை, சமய விழுமியங்களை, சமூக நிலைமைகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடத் தொடங்கியது. அந்த வகையில் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் மலர்ந்த சமூகச் சீர்திருத்த இயக்கமே இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஆகும். இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய கிலாபத் இயக்கத்தைத் தொடர்ந்து சமய மறுமலர்ச்சியில் மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டினர். தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி என்பன இந்தியத் துணைக் கண்டத்தில் தோற்றம் பெற்றன.

இலங்கையும் இந்தியாவும் ஒரே காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததனால் தமிழ்நாட்டு, கேரள வியாபாரிகள் இலங்கைக்கு அடிக்கடி வந்து போகும் நிலை காணப்பட்டது. அவ்வாறு இலங்கை வந்த கேரள வியாபாரிகளில் மௌலானா மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் சிந்தனையால் கவரப்பட்டிருந்த ஒரு பட்டதாரியான ஜெய்லானி சாஹிப் அவர்களும் இருந்தார். சுதந்திரம் கிடைப்பதற்கு சில வருடங்களுக்கு முன்பிருந்தே அவருடன் கொழும்பில் பழகிய சிலர் ஒரே சிந்தனையால் ஈர்க்கப்பட்டு அடிக்கடி சந்தித்து கருத்துப் பரிமாறிக் கொண்டதன் விளைவாக தனக்கேயுரிய பாணியில் சுதந்திரமாக இயங்கும் ஓர் அமைப்பாக 1954இல் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஆரம்பிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

ஆரம்பத்தில் மிகச் சில மனிதர்களின் ஒத்துழைப்புடன் புறக்கோட்டையில் பல இடங்களில் அல்குர்ஆன் விளக்க வகுப்புக்களை நடத்தியதன் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட இவ்வியக்கத்தில் படிப்படியாக படித்த இளைஞர்கள் கவரப்பட்டனர். ஜமாஅத் அன்று முன்வைத்த தூய இஸ்லாமிய சிந்தனை அன்றைய பாமர சமூகத்துக்குப் புதியதாக இருந்தமையால் ஆங்காங்கே எதிர்ப்புகள் தோன்றினாலும் ஜமாஅத் வளர்ச்சிப் பாதையிலேயே பயணித்தது.

இன்று நாடெங்கும் கிளை பரப்பிய பெரு விருட்சமாக வளர்ந்துள்ள இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, தனக்கே உரிய பாதையில் பிராந்தியங்களாகவும் உப பிராந்தியங்கள் கிளைகள் மற்றும் பயிற்சி மன்றங்களாகவும் இயங்கி வருகின்றது. 

நாடளாவிய ரீதியில் வருடாந்தம் நடத்தப்படும் இஜ்திமாக்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து பங்குபற்றிப் பயன்பெறுகின்றனர். பெண்கள் பகுதியும் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை பரந்து விரிந்து கடமையாற்றும் மாணவர் அணியையும் சிறுவர்களைப் பயிற்றுவிக்கும் அஸாபீர் பிரிவையும் தன்னகத்தே கொண்டு செயற்படுகிறது. 

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உலகின் எந்த நாட்டிலும் இயங்கும் எந்த ஒரு இயக்கத்தின் கிளையுமல்ல. எந்த இயக்கத்துடனும் கட்டுப்பாட்டு ரீதியான தொடர்பையும் அது கொண்டிருப்பதில்லை. இஸ்லாம் கூறும் நல்லுலகில் இஸ்லாத்துக்காகவும் முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபடும் அனைத்து அமைப்புகளுடனும் தோழமைரீதியான தொடர்புகளை அது பேணி வருகிறது. 

ஷஷஅல்லாஹ்வை வணங்கி வழிபட்டு அவனது தூதரின் வழியில் வாழ்வோம்|| எனும் இஸ்லாத்தின் அடிப்படையைக் கொள்கையாகவும் உள்ளத்திலும் உலகத்திலும் நன்மைகளை வளரச் செய்து தீமைகளை இழிவளவாக்க முயற்சிப்பதன் ஊடாக அமைதியும் சுபிட்சமும் நிறைந்த நல்வாழ்வுக்கு வழிகாட்டுதல் என்ற இலட்சியத்தையும் தன்னகத்தே கொண்டு ஜமாஅத் இயங்குகின்றது. 

ஜமாஅத் தனது செயற்பாடுகளை நெறிப்படுத்திக் கொள்வதற்காக சில வழிகாட்டல் தத்துவங்களில் நம்பிக்கை வைத்துச் செயற்படுகின்றது. முஸ்லிம் சமூகத்தின் பிளவுகள் ஏற்படும் காரணிகளை முற்றிலும் தவிர்த்தல், பிற சமூகங்களுடன் நல்லுறவைப் பேணி சக வாழ்வை உறுதி செய்தல், இஸ்லாத்தின் போதனைகள் பற்றிய விழிப்பூட்டல்களின்போது ஏனையவர்களின் சுதந்திரத்துக்கு மதிப்பளித்தல், அறிவுபூர்வமான அணுகுமுறையைக் கையாள்தல், நன்மை ஒன்று விளைவதைவிட, தீமையொன்று விளையாதிருப்பதற்கு முன்னுரிமை கொடுத்தல், தீவிரவாதம், வன்முறை என்பவற்றை முற்றாக நிராகரித்தல் என்பன அத்தகைய வழிகாட்டல் தத்துவங்களாகும்.

ஜமாஅத் ஆரம்பிக்கப்பட்டபோது வகுத்துக் கொண்ட ஒழுங்குகள், கட்டுப்பாடுகள், வழிகாட்டல்களில் இதுவரை பாரிய மாற்றமேதும் ஏற்படவில்லை. சமூக, சமய, கல்வித் துறைகளில் பணியாற்றும்போது சில வரையறைகளைப் பேணுவதை ஜமாஅத் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுகின்றது. ஜமாஅத் ஒருபோதும் கட்சி அரசியலில் ஈடுபடுவதில்லை என்பது அத்தகைய ஒரு வரையறையாகும். இந்த வரையறை இன்று வரை பேணப்படுகிறது. இன்h அல்லாஹ் தொடர்ந்தும் இது பேணப்படும். 

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பினுள் ஒருபோதும் இனவாதம், பிரதேசவாதம், மதவெறி, சாதி பேதம் ஊடுருவவில்லை. நாட்டின் அமைதிக்கும் அபிவிருத்திக்கும் ஒத்துழைக்கும் வேலைத்திட்டங்களையே ஜமாஅத் முன்னெடுத்து வருகிறது. பல நாடுகளில் ஒத்த பெயர்களில் அல்லது வேறு பெயர்களில் இயங்கும் எந்த அமைப்புக்கும் ஜமாஅத் கட்டுப்பட்டதல்ல என்பதுடன் அத்தகைய எந்த அமைப்பினதும் கிளையாகவோ இணைந்த அமைப்பாகவோ வகை கூற வேண்டிய பொறுப்போ ஜமாஅத்துக்கு இல்லை.

ஆன்மிக, லௌகிக செயற்பாடுகளை வலியுறுத்தும் தூய இஸ்லாத்தின் போதனைப்டி ஜமாஅத் இவ்விரு துறைகளிலும் கவனம் செலுத்துகிறது. அந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்கான நிகழ்ச்சித் திட்டங்களையும் அது கொண்டுள்ளது. இஸ்லாமிய விழிப்புணர்வையும் சன்மார்க்க விளக்கத்தையும் சமூகத்தில் ஏற்படுத்த பல நிகழ்ச்சிகளை ஜமாஅத் கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக நடத்தி வருகிறது. இவற்றின் பிரதான நோக்கங்களில் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்று மறுமையில் சுவர்க்கத்தை அடைதல், அமைதிக்கும் சுபிட்சத்துக்கும் எடுத்துக்காட்டான இஸ்லாமிய வாழ்வின்பால் ஒவ்வொருவரையும் ஊக்குவித்தல், வாழ்வின் சகல விவகாரங்களிலும் உயர்ந்த நற்குணங்களைப் பிரதிபலிக்கச் செய்தல் என்பன அடங்கும். 

குடும்பக் கட்டுக்கோப்பைச் சீராக வைத்திருக்கும் வழிகாட்டல்களை ஜமாஅத் தொடர்ந்து வழங்கி வருகிறது. பெற்றNhர்-பிள்ளைகள் நல்லுறவு, இரத்த உறவுகளைப் பேணல், குடும்பப் பிணக்குகளை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளல், பிள்ளைகளின் வடிவமைப்பிலும் பண்பாட்டுப் பயிற்சியிலும் குடும்பத்தின் வகிபாகத்தை வலியுறுத்தல் போன்ற அடைவுகளை நோக்கியே இத்தகைய நிகழ்ச்சித் திட்டங்கள் திட்டமிடப்படுகின்றன. 

எந்த ஒரு நாட்டினதும் சமூகத்தினதும் இருப்பு, இலக்கு இளைஞர்களின் எதிர்காலத்திலேயே தங்கியுள்ளது, சமூகத்தின் எதிர்காலத்தை கையிலெடுக்கக் காத்திருக்கும் இளைஞர் சமூகத்தை விழிப்பூட்டி பயிற்றுவித்து, நெறிப்படுத்தி சமூக உருவாகத்துக்கு அடித்தளம் அமைக்கும் பணிகளை ஜமாஅத் முன்னெடுத்து வருகிறது. 

உரிய காலத்தில் பொருத்தமான கல்விப் பாடநெறிகளை மேற்கொள்ளல், கல்வித் தரத்துக்கும் ஆற்றலுக்குமேற்ற தொழில்களைத் தெரிவுசெய்தல், ஆபாசம் நிறைந்த ஊடகக் கலாசாரத் தீங்குகளில் இருந்து பாதுகாத்தல், பயங்கரவாத... தீவிரவாத... மாபியா அமைப்புகளின் சதிவலைகளில் சிக்கிக் கொள்வதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் திறன்களை வழங்குதல் என்பன இளைஞர் விவகார நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான நோக்கங்களாக ஜமாஅத் வரையறுத்துள்ளது. கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், தலைமைத்துவப் பயிற்சி முகாம்கள், கல்வி, தொழில் வழிகாட்டல்கள், ஆன்மிகப் பயிற்சிகளின்பால் ஈடுபடுத்தும் தர்பிய்யா அமர்வுகள் இதற்கெனத் திட்டமிடப்பட்டு அவ்வப்போது நடத்தப்படுகின்றன. 

பெண்கள், சமூகத்தின் அரைப் பகுதியினர் என்றவகையில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி பெண்களின் சமூக வகிபாகத்தை சரியாக இனங்கண்டு அவர்களின் ஆற்றலை சமூக, குடும்ப முன்னேற்றத்தில் உச்ச அளவில் வழங்குவதை உறுதிப்படுத்த ஜமாஅத் ஆரம்ப காலத்திருந்தே செயற்பட்டு வரும் ஓர் அமைப்பு. பெண்கள் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாட்டை பிழையாகப் புரிந்து கொண்டிருக்கும் சமூகப் பிரிவினருக்கு அதனைத் தெளிவுபடுத்தும் முயற்சியில் ஜமாஅத் ஈடுபட்டு வருகிறது. 

இஸ்லாம் அனுமதித்த சுதந்திரத்தை பெண்களுக்கு வழங்க மறுக்கும் அதேவேளை, இஸ்லாம் அனுமதிக்காத அடக்குமுறைகளை அவர்கள்மீது திணிக்கும் வீட்டுச் சிறையில் இருந்தும் வீதிச் சிறையில் இருந்தும் அவர்களைப் பாதுகாப்பதும் இவற்றின் நோக்கமாகும். 

இதற்கென பெண்களின் அறிவு, திறன், ஆன்மிகம், சிந்தனை என்பவற்றை விருத்திசெய்யவும் அவர்களுக்கேயுரிய பொறுப்புகள், கடமைகளை நிறைவேற்றும் வகையில் பயிற்றுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. பெண்களின் இயல்பு, தேவை, சூழல் என்பவற்றை அப்படையாகக் கொண்ட விழிப்புணர்வு அமர்வுகள், கருத்தரங்கு, தலைமைத்துவப் பயிற்சிகள், குடும்ப அமர்வுகள், பிரச்சினை தீர்க்கும் வழிகாட்டல்கள், உளவளத் துணை, குழந்தை வளர்ப்பு தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்சிகள் பெண்களுக்கென விசேடமாக நடத்தப்படுகின்றன.

சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வை மேம்படுத்துவது மிகப் பெரும் தேவையாக உள்ளது. ஜமாஅத் தொடக்க காலம் முதலே இத்துறையில் ஈடுபட்டு வந்துள்ளது. இஸ்லாத்தின் வழிகாட்டல்களுக்கமைய மனிதன் ஒரு ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைக்கப்பட்டான். ஷஷஇனங்கண்டு கொள்வதற்காக கோத்திரங்களாக இனங்களாக ஆக்கினோம்|| எனும் இறைவார்த்தையை சிரமேற் கொண்டு செயற்படும் ஓர் அமைப்பாக ஜமாஅத் இருந்து வருகிறது. 

இஸ்லாத்தைப் பற்றிய பிழையான புரிதல்களைக் களையும் வகையிலும் அல்லாஹ்வின் வேதத்தைப் படிக்க விரும்புவோருக்கு உதவும் வகையிலும் அல்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பை ஜமாஅத் வெளியிட்டுள்ளது. அல்குர்ஆனின் விளக்கவுரையான தப்ஹீமுல் குர்ஆனை 12 தொகுதிகளாக சிங்களமொழியில் ஜமாஅத் வெளியிட்டுள்ளது. 

கடந்த 30 வருடங்களாக ப்ரபோதய என்ற சிங்கள மாசிகையை ஜமாஅத் தொடர்ந்து பிரசுரித்து வருகிறது. வேறு பல தலைப்புகளில் சிங்கள நூல்கள் எழுதப்பட்டும் சிங்களத்துக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டுள்ளன.

ஒரு சமூக இயக்கம் என்ற வகையில் சமூகப் பணிகளை ஜமாஅத் ஒருபோதும் மறந்துவிடவில்லை. அனர்த்த நிவாரணம், அநாதைகள் அநாதரவானவர்கள் பராமரிப்பு, வலது குறைந்தவர்களின் விசேட தேவைகளை நிறைவேற்றுதல், சுய தொழிற் பயிற்சி, மருத்துவ மற்றும் கண் சத்திர சிகிச்சை முகாம்கள், இரத்ததான நிகழ்ச்சிகள், சூழல் பாதுகாப்பு மற்றும் டெங்கு ஒழிப்புக்கான சிரமதானப் பணிகள், வறுமைக் கோட்டில் உள்ளவர்களைக் கைதூக்கிவிடும் சிறு கைத்தொழில்களுக்கான கடன் வசதிகள், சிறு முதலீட்டுத் திட்டம், இலவச கல்வி, தொழில் வழிகாட்டல்கள், கிணறுகள், வீடமைப்புத் திட்டங்கள் என்று ஜமாஅத்தின் சமூக சேவைப் பணிகளின் பட்டியல் நீளுகின்றது. நிகழ்கின்றன. இந்தப் பணிகளின்போது ஜமாஅத் ஒருபோதும் இன, மத, அமைப்பு, பிரதேச வேறுபாடுகளுடன் செயற்பட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நல்லவற்றையும் நல்லவர்களையும் மதித்தல், அவர்களுடன் முடியுமான அனைத்திலும் ஒத்துழைத்தல் ஜமாஅத்தின் கொள்கையாக உள்ளது. எவரையும் ஜமாஅத் எதிரியாக, போட்டியாளராகக் கருதியது கிடையாது. முஸ்லிம்களை மட்டுமன்றி, முஸ்லிமல்லாத நல்ல உள்ளங்களுடனும் கைகோர்த்து நல்லதொரு தேசத்தைக் கட்டியெழுப்ப ஜமாஅத் ஆசை வைத்துளளது. அந்த நோக்கத்திற்காக உழைக்கும் அனைவருடனும் இன்h அல்லாஹ் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி இருக்கும், அல்ஹம்துலில்லாஹ்.


எம்.எச்.எம். ஹஸன்
உதவிப் பொதுச் செயலாளர்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :