ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்-
கல்குடா, ஓட்டமாவடி மத்திய கல்லூரியிலும், பாத்திமா பாலிகா பெண்கள் பாடசாலையிலும் தூரபிரதேசத்தில் இருந்து பல சிரமங்களுக்கு மத்தியில் கல்விகற்கும் மாணவ, மானவிகளுக்கு அல்- கிம்மா நிறுவனத்தின் சமூகப் பணிகளில் ஒரு கட்டமாக துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டதுடன், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மூன்று யுவதிகளுக்கு அவர்களின் சுய தொழிளுக்காக தையல் இயந்திரங்களும் கையளிக்கப்பட்டது.
ஓட்டமாவடி பாத்திமா பாலிகா பெண்கள் பாடசாலை கேட்போர் கூடத்தில் இன்று (10.11.2014) அல்-கிம்மா நிறுவனத்தின் பகுதிநேர யுத்தியோகத்தர் SIM.சாதாத் அசிரியர் தலைமையில் இடம்பெற்ற கையளிக்கும் யுத்தியோக பூர்வ வைபவத்தில் அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாரூன் (ஸஹ்வி) அவர்களும், ஓட்டமாவடி பாத்திமா பாலிகா பெண்கள் பாடசாலையின் அதிபர் ஜனாப் நெய்னா மொஹம்மட் அவர்களும், நிறுவனத்தின் ஆலோசகர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment