வாழைச்சேனை கடதாசி ஆலையில் தற்போதைய ஜனாதிபதி அதிமேதகு மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டும், இம்முறை ஜானாதிபதி தேர்தலில் அவர் வெற்றி பெறுவதனை வேண்டிய ஒன்று கூடலுடனான துவா பிரார்த்தனையும் மஜ்லிஸ் தலைவர் ருடு. பிச்சை தம்பி தலைமையில் கடதாசி ஆலையின் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
இவ்வைபவத்துக்கு கடதாசி ஆலையின் தவிசாளர் மங்கள ஊ செனரத் பிரதம அதீதியாக கலந்து சிறப்பித்ததுடன், கெளரவ அதீதியாக உற்பத்திதிறன் ஊக்குவிப்புத் துறை அமைச்சர் பசீர் சேகுதாவூத் அவர்களின் பிரத்தியேக செயலாளர் முஸ்தபா ஆசிரயரும், கடதாசி ஆலையின் ஊழியர்களும் பிரசன்னமாயிருந்தனர். மேலும் தவிசாளர் மங்கள ஊ செனரத்துக்கு நீண்ட ஆயுளை வேண்டியும் பிரார்த்தனை இடம்பெற்றது முக்கிய விடயமாகும்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment