டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிந்தவூர்ப் பிரதேசம் நேற்றும் (03),இன்றும்(04) முழுமையாக சுற்றி வளைக்கப்பட்டு, டெங்கு ஒழிப்பு
நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக இடம் பெற்றன.
நிந்தவூர் பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி.தஸ்லிமா பஸீர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கைகளில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், நிந்தவூர் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை சமூகப் பாதுகாப்புப் பிரிவு பொலிசார், காரைதீவு இராணுவத்தினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து கொண்டனர்.
நிந்தவூர் பிரதேசம் முழுவதும் பத்துப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, மேற்படி
குழுவினர்களால் இரு நாட்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
பாடசாலைகள், வைத்தியசாலைகள், பொதுச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், அரிசி ஆலைகள், உணவாலைகள், தனியார் வீடுகள்; போன்றவை சோதனைக்குட்படுத்தப்பட்டதோடு, டெங்குக் குடம்பிகள் உற்பத்தியாகக் கூடிய இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டு, அழித்தொழிக்கப்பட்டன.
பல தடவைகள் அறிவுறுத்தியும், டெங்குக் குடம்பிகள் உற்பத்தியாகக் கூடிய சூழலை வைத்திருந்தோர் பலருக்கு சட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment