ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த இரண்டாவது முறையாக பதவியேற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், இன்றைய தினம் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்படலாமென ஏற்கெனவே பல யூகங்கள் வெளிவந்தன.
ஜனாதிபதி மஹிந்த, மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட முடியுமா என்ற விடயம் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அதனை ஆமோதிக்கும் வகையில் தனது வியாக்கியானத்தை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவுக்குள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :
Post a Comment