தனி நிருவாக மாவட்டக் கோரிக்கையை இனப்பிரச்சினையாக மாற்ற வேண்டாம்- செனவிரத்ன

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள தனி நிருவாக மாவட்டக் கோரிக்கையை இனப்பிரச்சினையாக மாற்ற வேண்டாம் என பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டபிள்யு. டி.ஜே. செனவிரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இந்த கோரிக்கை குறித்து இன்று 08-11-2014 பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கல்முனைப் பிரதேசத்துக்கு தனி நிருவாக மாவட்டம் கேட்பதற்கு எதிரான கருத்துக்கள் நிலவுவதை காண முடிகின்றது. இதில் உண்மையும் இருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் முஸ்லிம்கள் அம்பாறை மாவட்டத்துக்கு வந்து தமது கருமங்களை சிங்களத்தில் செய்து கொள்வதில் பிரச்சினைகள் இருக்கின்றன. இதனை நானும் ஏற்றுக்கொள்கின்றேன்.

இதற்கு நிருவாக ரீதியில் தீர்வு காண வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட அபிப்பிராயமும் ஆகும்.இந்தக் கோரிக்கையை இனச் சாயம் கொண்டு பார்க்க முற்பட கூடாது. இந்த நாட்டைக் கூறு போடவும் எத்தனிக்கக் கூடாது.

இன்னும் இந்த நாட்டில் பல்வேறுபட்ட மக்கள் வாழும் பிரதேசங்கள் உள்ளன எனவும் அமைச்சர் செனவிரத்ன மேலும் கூறினார்.
jm
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :