அக்கரைப்பற்று உடற்பயிற்சி நிலையத்திற்கான கட்டிட வேலைகள் பூர்த்தி!

அஸ்லம் எஸ்.மௌலானா-


சிய மன்றத்தின் அனுசரணையுடன் அக்கரைப்பற்றில் நிறுவப்படவுள்ள உடற்பயிற்சி நிலையத்திற்கான (Gym Center) கட்டிட நிர்மாண வேலைகள் பூர்த்தியடையும் நிலைக்குவந்துள்ளது.

இதனை ஆசிய மன்றத்தின் நிபுணத்துவ ஆலோசகர் உதுல, நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத்,ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அஹமட் சக்கி அதாஉல்லா கட்டிட நிர்மாணப் பணிகள் குறித்து விபரித்துக் கூறினார். இம்மாத இறுதிக்குள் நிர்மாண வேலைகள் யாவும்பூர்த்தியடையும் என்றும் உடற்பயிற்சி நிலையத்திற்கான உபகரணத் தொகுதிகள் விரைவில் தருவிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்திற்காக ஆசிய மன்றம் 5.2 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்தமைக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்த அவர், மேலதிகமாக தேவைப்படும் நிதியை தமது மாநகரசபையினால் ஒதுக்கீடு செய்து சகல் வசதிகளும் கொண்ட உடற்பயிற்சி நிலையமாக திறந்து வைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பில் அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் அஸ்மி ஆதம்லெப்பை உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.


அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அஹமட் சக்கி அதாஉல்லாவிடம் ஆசியா பவுண்டேஷன் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் கடந்த செப்டம்பர் 04 ஆம் திகதி இத்திட்டத்திற்கான காசோலையை கையளித்த போது..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :