எம்.ஏ. தாஜகான்-
2014 சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பொத்துவில் பிரதேச சபையின் எல்லைக்குள் ஓய்வு பெற்று உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் 34 ஆசிரியர்கள் அதிபர்களை கௌரவிக்கும் முகமாக பொத்துவில் பிரதேச சபை மற்றும் தில்ஸாத் அகமத் பௌண்டேசன் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மீராலெவ்வை வாத்தியார் விருது வழங்கும் கௌரவ நிகழ்வு பொத்துவில் அல் பஹ்ரியா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (2014.11.30) நடை பெற்றது.
பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளரும் தில்ஸாத் அகமத் பௌண்டேசனின் தலைவருமான எம்.எஸ். அப்துல் வாசித் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி காணி போக்குவரத்து மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் விமல வீர திசாநாயக்கா அவர்களும் விஸேட அதிதியாக மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் அவர்களும் சிறப்பதிதியாக பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முசர்ரத் உப வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.ஏ. அஸீஸ் மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment