பொத்துவில் அல் பஹ்ரியா வித்தியாலயத்தில் அடுத்த வருடம் தரம் 10 -11 வகுப்புக்கள் வைப்பதற்கான அனுமதி கிழக்கு மாகாண கல்வி அமைச்சரினால் இன்று வழங்கப்பட்டுள்ளதாக பஹ்ரியா வித்தியாலயத்தின் அதிபர் கே. ஹம்சா அவர்கள் தெரிவித்தார்.
பஹ்ரியா வித்தியாலயத்தில் தற்பொழுது தரம் 09 வரையான வகுப்புக்கள் மாத்திரம்தான் இயங்கி வந்தன. இப்பகுதி மாணவர்கள் 10 -11 கற்பதற்கு ஏனைய தூர பாடசாலைகளுக்கு செல்வார்கள்.
இதனை அறிந்து சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் அமைப்பாளர் ஏ. எம். ஆப்துல் மஜித் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசானாயக்க அவரகளின் கவனத்திற் கொண்டு வந்ததற்கேற்ப இன்று அனுமதி கிடைத்துள்ளது.
இதன் பொறுட்டு 2016 இல் இப்பாடசாலையில் 60 மாணவர்கள் க.பொ.த சாஃத தோற்றுவார்கள் என்றும் அதிபர் தெரிவித்தார்.
.jpg)
0 comments :
Post a Comment