ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப் பினர் அஸ்வரினா லேயே முஸ்லிம்களுக்கு பிரச்சினைகளே தவிர எம்மால் அல்ல என்று தெரிவித்த ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.யான சுனில் ஹந்துன்னெத்தி தேர்தலின் கட்சியொன்றின் சார்பில் போட்டியிட்டு இந்த சபைக்கு வருகை தர முடியுமா என்று அஸ்வரைப் பார்த்து கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் நீர்வள முகாமைத்துவம் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதன் போது நீர் வழங்கல் வடிகாலமை ப்பு அமைச்சின் ஊடகப் பிரிவின் இணைப்பாளர் மீது பல குற்றச் சாட்டுக்களை சுனில் ஹந்துன்னெத்தி எம்.பி. முன்வைத்தார்.
இதனையடுத்து குறுக்கீடு செய்த அஸ்வர் எம்.பி. குறித்த இணைப்பாளர் ஒரு முஸ் லிம் என்பதனாலேயே சுனில் ஹந்துன்னெ த்தி எம்.பி. இப்படி குற்றம் சுமத்துவதாக கூறினார்.
இதற்குப் பதிலளித்த ஹந்துன்னெத்தி எம்.பி. முஸ்லிம்களுக்கு ஒரு போதும் எம் மால் எந்தப் பிரச்சினையும் கிடையாது. ஆனால் அஸ்வர் எம்.பி.யே முஸ்லிம்களு க்கு பிரச்சினையாக இருந்து வருகிறார் என்று கூறியதுடன் கட்சியொன்றில் போட்டியிட்டு உங்களால் இந்த சபைக்கு வர முடியுமா? என்று அஸ்வர் எம்.பி.யைப் பார்த்து கேள்வி எழுப்பியதுடன் முதலில் அதனைச் செய்து காட்டுங்கள் என்றார்.
<வீரகேசரி>
<வீரகேசரி>

0 comments :
Post a Comment