காத்தான்குடி பிரதேசத்தில் திண்மக் கழிவு முகாமைத்துவத்தை இலகுபடுத்துவதற்கு வாகனங்கள் கையளிப்பு!

 பழுலுல்லாஹ் பர்ஹான்-

ள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் காத்தான்குடி பிரதேசத்தில் திண்மக் கழிவு முகாமைத்துவத்தை இலகுபடுத்துவதற்காக வழங்கபட்ட 40 இலட்சம் ரூபாய் மெறுமதியான கனரக வாகனத்தை கையளிக்கும் நிகழ்வும் ,காத்தான்குடி நகர சபையும் யூனொப்ஸ் நிறுவனமும் இணைந்து காத்தான்குடி நகர சபை எல்லைக்குள் அமுல்படுத்;தப்பட்டுவரும் திண்மக் கழிவு முகாமைத்துவத்தை இலகுபடுத்துவதற்காக யூனொப்ஸ் நிறுவனத்தினால் வழங்கபட்ட 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு முச்சக்கர வண்டிகளை காத்தான்குடி நகர சபையின் திண்மக் கழிவு முகாமைத்துவ பிரிவுக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று காத்தான்குடி நகர சபையில் 18-11-2014 இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஜெ.சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி நகர தவிவாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,பிரதித் தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம்,நகர சபை உறுப்பினர்களான பாக்கீர்,சியாட்,அலிசப்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான திண்மக் கழிவு முகாமைத்துவத்தை இலகுபடுத்துவதற்காக வழங்கபட்ட கனரக வாகனத்தையும், இரண்டு முச்சக்கர வண்டிகளையும் காத்தான்குடி தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் காத்தான்குடி நகர சபையின் திண்மக் கழிவு முகாமைத்துவத்துக்கு பொறுப்பான எம்.ஐ.எம்.றபீக்கிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :