தான் ஆளும்கட்சியில் இணைந்துகொள்ளப் போவதில்லை என்று ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ சற்று முன்னர் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
அரசாங்கம் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு 500 மில்லியன் ரூபா பணம் வழங்கியதாகவும் அதனால் ஆளும்கட்சியில் இணைந்து கொள்ளவிருப்பதாகவும் வெளியான செய்திகளை அவர் முற்றாக மறுத்துள்ளார்.
அடுத்த ஆண்டுக்கான வரவு, செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு தற்போது பாராளுமன்றத்தில் நடைபெற்று வரும்வேளையிலேயே திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்க சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆளும் கட்சிக்கு தாவி, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களான பாலித தேவாரப்பெரும மற்றும் பாலித ரங்க பண்டார ஆகியோரும் தாங்கள் ஆளும்கட்சிக்கு இணையப்போவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளனர். தாங்கள் ஒருபோதும் ஆளும்கட்சியில் இணையமாட்டோம் என்று தற்போது நடைபெறும் பாராளுமன்ற அமர்வில் தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment