கல்விக் கல்லூரியில் கற்று பாடசாலைக்கு ஆசிரியராக செல்கின்ற நீங்கள் மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டுடன் இணைந்ததாக துணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் மாணவர்களையும் இணைத்து அவர்களை நாட்டின் நற் பிரஜையாக வளர்த்தெடுக்க வேண்டும் என அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ் தெரிவித்தார்.
சென் அம்பியுலெனஸ் அமைப்பின் முதலுதவி பயிற்சிகளை பெற்ற ஆசிரிய கல்விக் கல்லூரி மாணவர்களுக்கான வருடாந்த சான்றிதழ் வழங்கும் வைபவம் மாவட்ட ஆணையாளரும் கல்விக் கல்லூரியின் உப பீடாதிபதியுமான எம்.எச்.எம். மன்சூர் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பீடாதிபதி மேற்கணடவாறு தெரிவித்தார்.
இதன் போது சென் அம்பியுலெனஸ் அமைப்பின் முதலுதவி பயிற்சிகளை பெற்ற 174 ஆசிரிய கல்விக் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன் 10 வருட காலமாக சென் அம்பியுலெனஸ் அமைப்பின் வழிகாட்டிகளுக்கு சான்றிதழ்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கல்விக் கல்லூரியின் உப பீடதிபதி எம்.ஏ. கலீல், கல்விக் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளுக்கு பொறுப்பான உப பீடதிபதி எம்.பி.ஏ. அஸீஸ் உட்பட சென் அம்பியுலெனஸ் அமைப்பின்; வழிகாட்டிகளும், கல்விக் கல்லூரி ஆசிரிய மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment