சுலைமான் றாபி-
நிந்தவூரில் கணணி பயிற்சிநெறியை பயிலும் College of Modern Technology மாணவர்களுக்கு இன்று (19) பயிற்சி நெறிக்கான சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டன. நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எம்.எம். இஸ்ஹாக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஆரிப் சம்சுதீன் கலந்து கொண்டு சீருடைகளை வழங்கி வைத்தார்.
நிந்தவூர் அறபா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் இணைப்பாளர் இசட்.எம்.முனீர், நிந்தவூர் அறபா வித்தியாலயத்தின் அதிபர் எம். ஹபீபுல்லாஹ், அல்-மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.எல். நிசாமுடீன், கிராம சேவகர் எம்.ரி.எம். அக்ரம் ஆகியோர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கி வைத்தனர். இதேவேளை இந்த கல்வி நிறுவனத்தில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் கணணி மென்பொருள் பற்றிய விஷேட பயிற்சி நெறிகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment