அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை மாநகர சபையில் நீண்ட காலமாக தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வந்த 11 சாரதிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று (19) புதன்கிழமை கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநகர சபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.ஜெயக்குமார், எம்.எஸ்.உமர் அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா, ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கணக்காளர் எச்.எம்.எம்.ரஷீத், முதல்வரின் செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் ஆகியோரும் கலந்து கொண்டு குறித்த சாரதிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment