ஹரீஸ் எம்.பியின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை ஸாஹிறாவின் 65வது ஆண்டு விழாவும், அடிக்கல் நாட்டு விழாவும்!

ஹாசிப் யாஸீன்-

ல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் 65வது ஆண்டு நிறைவையொட்டி திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் கல்லூரியின் காரியப்பர் கூட்ட மண்டப புனர்நிர்மாணம், மூன்று மாடி வகுப்பறைக் கட்டிட நிர்மாணம் போன்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக பாடசாலையின் மூன்று மாடி வகுப்பறைக் கட்டிட நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் பாடசாலையின் ஸ்தாபக தின நிகழ்வும் நளை 16.11.2014ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலையின் காரியப்பர் கூட்ட மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் பீ.எம்;.எம்.பதுர்தீன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ்வேலைத்திட்டத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைக்கவுள்ளார்.

இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸின் குழுக்களின் தலைவருமான ஏ.எம்.ஜெமீல், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன்;, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல்;, சாய்ந்தமருது கோட்டக் கல்வி அதிகாரி ஐ.எல்.ஏ.றகுமான் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

எனவே இந்நிகழ்வில் இக்கல்விக் கூடத்தில் கல்வி கற்ற கல்விமான்கள், உயர் அதிகாரிகள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம் என அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம் என்பன ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :