அமைச்சரின் ஊடகப்பிரிவு-
கிழக்கு மாகாணத்தில் கிரிக்கட் விளையாட்டுத் துறையை முன்னேற்றும் வகையில் மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் எடுத்து வரும் நடவடிக்கையின் இன்னுமொரு கட்டமாக பாகிஸ்தான் பொறியியல் கவுன்சில் தூதுக்குழு ஒன்று அமைச்சரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
மாகாண அமைச்சரின் அழைப்பின் பேரில் கொழும்புக்கு வந்த இஸ்லாமிய நாடுகளின் பொறியியலாளர் சம்மேளனத்தின் துணைத் தலைவரும் பாகிஸ்தான் பொறியியல் கவுன்சிலின் தலைவருமான பொறியியலாளர் செய்யித் அப்துல் காதிர் ஷா தலைமையிலான தூதுக் குழுவினர் கிழக்கின் விளையாட்டுத் துறை வளர்ச்சி பெற உதவுவதாக உறுதியளித்தனர்.
தாம் ஆக்கபூர்வமான உதவிகளையும் பங்களிப்புக்களையும் நல்குவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். கிரிக்கட் பயிற்சி எடுப்பதற்கு போதிய வசதியின்மை காரணமாகவே கிழக்கு விளையாட்டு வீரர்கள் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தமது திறமைகளை வெளிக்காட்டுவதில் தடை உள்ளதாக ஹாபிஸ் நசீர் அஹமட் தூதுக்குழுவிடம் தெரிவித்தார்.
முறையான பயிற்சியின்மையும் தரமான விளையாட்டுத் திடல் இல்லாமையுமே இந்த வீரர்கள் சர்வதேச ரீதியில் போட்டிகளில் பங்கேற்று இலங்கைக்கு குறிப்பாக கிழக்கு மண்ணுக்கு புகழ் சேர்ப்பதில் முட்டுக் கட்டை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மாகாண அமைச்சரின் கேட்டுக் கொண்ட தூதுக் குழுவினர் கிழக்கு மாகாணத்தில் தரம் வாய்ந்த கிரிக்கட் விளையாட்டு மைதானமொன்றை அமைப்பதற்கும் கிழக்கு இளைஞர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கும் தமது கவுன்சில் நடவடிக்கை எடுக்குமெனவும் இது தொடர்பில் பாகிஸ்தான் விளையாட்டுத் துறை அதிகாரிகளுடனும் பேச்சு நடாத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
பாகிஸ்தானின் இந்த பொறியியல் கவுன்சிலில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கட் விளையாட்டு வீரர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த தூதுக்குழுவினர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment