நிந்தவூரில் முன்னணி பாலர் பாடசாலைகளில் ஒன்றான அல்-மதீனா பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா சிறப்பு நிகழ்ச்சிகள் அதன் ஸ்தாபத்தலைவரும், ஊடகவியலாளருமான ஏ.எல். றபீக் பிர்தௌஸ் தலைமையில் இன்று (30) நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு அதிதிகளாக சிறுவர் நன்னடத்தை அலகுப் பொறுப்பதிகாரி ஏ.உதுமாலெவ்வை, நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம். சலீம், முன்னாள் நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.எம். அமீன், சுகாதார திணைக்களத்தின் ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தர் எஸ். ஹமீட், ஊடகவியலாளர் ஏ.புகாது மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மழலைகளின் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் இறுதியில் அதிதிகளால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மணிகளை பாராட்டி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment