முதலாவது விடயம்
மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், முஸ்லிம்களின் வாக்குகளை பெற வேண்டுமானால் முஸ்லிம் காங்ரஸ் உடன் பேச்சு வார்த்தை நடாத்தி அதன் ஆதரவினைப் பெற்றால் போதும், அப்போது முஸ்லிம்கள் எமக்கே வாக்களிப்பார்கள் என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லிம் காங்ரஸ் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் கடந்த கால கசப்பான அனுபவங்களின் காரணமாக முஸ்லிம்களின் வாக்குகள் ஐ.தே.கட்சிக்கே செல்லும் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. அப்ப்டியே முஸ்லிம் காங்ரஸ் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கினாலும் ஆதரவு வழங்கும் முஸ்லிம் காங்ரஸின் உறுப்பினர்களும், அவர்களது குடும்பத்தாரும் வாக்களிப்பார்களே தவிர முஸ்லிம் மக்கள் அல்ல.
இரண்டாவது விடயம்
முஸ்லிம் மக்கள் எவ்வாறு அரசாங்கத்தின் கடந்த கால நடவடிக்கைகள் தொடர்பாக அதிர்ப்தி அடைந்து அரசாங்கம் தொடர்பாக விரக்தி அடைந்திருக்கிறார்களோ...அதே போல்தான் இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் அரசாங்கத்தின் மீது பல காலமாக விரக்தி அடைந்திருக்கிறார்கள். ஆக தமிழ் மக்களது வாக்குகளும் அரசாங்கத்தை சென்றடைவதில் சிக்கல்தான் நிலவுகிறது.
அரசாங்கம் வழங்கி உள்ள அமைச்சு, பிரதி அமைச்சுப் பதிவிகளை பெற்று சுகபோக வாழ்வு வாழும் தமிழ் அரசியல்வாதிகள்தான் தமிழ் மக்கள் இம்முறை அரசாங்கத்துக்கு வாக்களிக்க வேண்டும், எங்கள் ஆதரவு அரசாங்கத்துக்குதான் என்று கூக்குரல் இடுகிறார்களே தவிர தமிழ் மக்கள் அல்ல.
மூன்றாவது விடயம்
ஐக்கிய தேசிய கட்சியின் செல்வாக்கு முன்னரை விட மக்கள் மத்தியிலும் சரி அரசியல் வட்டாரத்திலும் சரி கொஞ்சம் ஓங்கியே காணப்படுகிறது எனக் கூறலாம் இதற்குக் காரணம் அவர்களது “பொதுவேட்பாளர்“ என்ற வார்த்தைப் பிரயோகமே.
பொது வேட்பாளர் யார் என்பதனை இன்னும் அறிவிக்காமல் அதற்கான ஆலோசனைகளில் ஐ.தே.க ஈடுபட்டுக் கொண்டிருப்பது மக்கள் மத்தியில் இன்னும் இன்னும் ஐ.தே.க தொடர்பாக ஆர்வத்தையே துாண்டிக் கொண்டிருக்கின்றது. யார் அந்தப் பொதுவேட்பாளர் என்ற அந்த எதிர்பார்ப்பு முழு நாட்டு மக்களிடத்திலும் எழுந்திருப்பதானது ஐ.தே.க க்கு கிடைத்த மாபெரும் ஒரு விளம்பர உத்தியாகும்.
மேலும் அரசாங்க தரப்பில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஐ.தே.க யினை நாடி வந்து கொண்டிருப்பதும் மக்கள் மத்தியில் ஐ.தே.க தொடர்பாக ஒரு நம்பிக்கையினை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
நான்காவது வியடம்.
ஐ.தே.க யின் பொதுவேட்பாளராக முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் வருவதற்கான சாத்தியக் கூறே அதிகம் காணப்படுகிறது காரணம் சந்திரிக்காவுக்கு அன்று இருந்த மக்கள் செல்வாக்கு இன்றும் காணப்படுவதுதான் இதற்கு காரணம், அதனையே ஐ.தே.க தமக்கு சாதகமாக பயண்படுத்த இருக்கிறது.
ஐ.தே.க ஆனது பொதுவேட்பாளரை இறக்குகிறோம் என்று கூறி விட்டு ரணில் விக்கரமசிங்கவை இறக்கினால் பொதுவேட்பாளர் என்ற நாமம் சப்பையாகிப் போடும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை, ரணில் பொது வேட்பாளர் என்றால் அவரை அறிமுகப்படுத்த இவ்வளவு பம்மாத்து தேவையில்லையே.
ஐந்தாவது விடயம்.
முஸ்லிம் மக்களின் அரசாங்கத்தின் மீதான அதிர்ப்தி, தமிழ் மக்களின் அரசாங்கத்தின் மீதான வெறுப்பு, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் மீதான அரசாங்கத்தின் பிடிவாதம் அதன் மீதான ஒரு சில முக்கிய சிங்கள இயக்கங்களினதும், தலைவர்களினதும் எதிர்ப்பு போன்ற பல்வேறு காரணங்களை வைத்துப் பார்க்கும் போது மகிந்த தலைமையிலான அரசாங்கம் இம்முறை கொஞ்சம் ஆட்டம் கானும் என்பதனை ஊகிக்க முடிகிறது.
எது எவ்வாறாயினும் நடைபெற இருக்கும் இத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியானாலும் சரி ஆளும் கட்சியானாலும் சரி முஸ்லிம்களது நலனில் யார் அதிகம் அக்கரை காட்டியிருக்கிறார்களோ...!!!! இனியும் யார் காட்டுவார்களோ..!! அவர்களுக்கு எமது வாக்குகளை அளித்து எமது அரசியல், சமய, கலாச்சார உரிமைகளை முஸ்லிம்களாகிய நாம் பாதுகாக்க வேண்டும்.
மக்கள் நண்பன்
சம்மாந்துறை அன்சார்.
0 comments :
Post a Comment