கல்முனை இஸ்லாமிய சமூக சங்கத்தின் காரியாலயமும்; பொது நூலகமும் திறந்து வைக்கும் நிகழ்வு கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் சந்தைக் கட்டிடத் தொகுதியில் இன்று இடம்பெற்றது.
இஸ்லாமிய சமூக சங்கத்தின் தலைவர் எம்.ஐ.எம்.பதுர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனைக்குடி முகைதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான ஏ.எம்.றியாஸ், கல்முனை மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஏ.எச்.நபார், முன்னாள் கல்வி அதிகாரி எம்.பீ.எச்.முஹம்மட் உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள பொது நூலகத்தில் மார்க்கம் சம்பந்தமான புத்தங்கள், கல்விப் பொதுத்தர சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான கடந்த கால வினாவிடைப் புத்தகங்கள், நாளாந்த பத்திரிகைகள் மற்றும் பல்துறை சார்ந்த புத்தகங்கள் என்பன வைக்கப்பட்டுள்ளது. இந்நூலகத்தின் மூலம் சகலரும் பயன் பெருமாறு அமைப்பின் தலைவர் எம்.ஐ.எம்.பதுர்தீன் இதன்போது தெரிவித்தார்.
கல்முனை இஸ்லாமிய சமூக சங்கம் கடந்த 10 வருடங்களாக கல்முனைப் பிராந்தியத்தில் கல்வி, கலாச்சாரம், அனர்த்தம், சிரமதானம் போன்ற பணிகளை தனது அங்கத்தவர்களைக் கொண்டு சிறப்பாக செய்து வருகின்றது.
இவ்வமைப்பின் சிறந்த செயற்பாட்டினைக் கண்டு கல்முனை பிராந்தியத்திலுள்ள அரசியல் தலைமைகள், வர்த்தகர்கள், தனவந்தர்கள் தங்களது பங்களிப்புக்களை வழங்கி வருகின்றனர்;.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment