பி. முஹாஜிரீன்-
இலங்கை மின்சார சபையின் கல்முனை மின் பொறியியலாளர் அலுவலகம் மின் பாவனையாளர் விபரம் திரட்டும் பணியை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனைப் பிராந்திய முகாமையாளர் எம்.ஆர்.எம். பர்ஹான் தெரிவித்தார்.
இது குறித்த விபரங்களடங்கிய படிவம் பிராந்தியத்திலுள்ள அனைத்து மின் பாவனையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற சேவையின் தரத்தை உயர்த்தும் முகமாகவும், பராமரிக்கும் பொருட்டும், மின் துண்டிப்பு பற்றி அறிவிப்பதற்காகவும், நிலுவைக் கட்டணம் செலுத்தப்படாமைக்காக மின்சாரத்தை துண்டித்தல் மற்றும் வேறு அத்தியவசிய தகவல்களை வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் வழங்குவதற்காகவும் இவ்விபரங்கள் திரட்டப்படுவதாக கல்முனை பிரதேச மின்பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
வாடிக்கையாளர் தகவல் திரட்டு படிவத்தை பூர்த்தி செய்து மின்மனி வாசிப்பாளர்களிடமோ அல்லது பிரதேச மின் பொறியியலாளர், இலங்கை மின்சார சபை, என்.எச்.டி.ஏ.கட்டடம், கல்முனை எனும் முகவரிக்கோ அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
0 comments :
Post a Comment