கலைந்து போன கணவுகள்

முனாப் நுபார்தீன்-

லங்கை முஸ்லிம்களின் வரலாறு நெடுகிலும் காலத்துக்குக் காலம் பல்வேறு கணவுகள் தோன்றிக் கலைந்து சென்று கொண்டிருப்பதனைப் பார்க்குகின்றோம். நமது கையாலாகாத தனத்தினால் இன்று வரை ஒரு கணவைக் கூட நனவாக்கிக் கொள்ள முடியாது போய் உள்ளது. அந்தவகையில் சமகால அரசியல் வரலாற்றுக் கணவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்.

அரசியல் ரீதியாக இரு பெரும் தேசிய கட்ச்சிகளில் மாத்திரம் அங்கம் வகித்து இரு பெரும் பிரிவுகளாகக் காணப்பட்ட முஸ்லிம் சமூகத்தை ஒரே அணியில் ஒன்று சேர்க்க வேண்டும் அதன் ஊடாக நமது உரிமைகளைப் பெற வேண்டும் என்று நமது தேசியத் தலைவர் மர்ஹூம் எம். எச். எம். அஸ்ரப் அவர்கள் கணவு கண்டார்கள்.

அவர்களின் கணவை நினைவாக்கும் வகையில் தேசிய மட்டத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் அவர்களுடன் அணிதிரண்டார்கள் அதன் காரணமாக அவர்களின் கணவு அவரது வாழ் நாளிலேயே ஓரளவு நிதர்சணமாக நிறைவேறிக் கொண்டிருந்தது. அந்தப் பொண் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மகிழ்ச்சிகரமான ஒரு தேநசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயனத்திலேயே அந்த மாமனிதர் தன்னை அற்பணித்தார் என்று சொன்னால் கூட அது மிகையாகாது.

அவ்வாறான கால கட்டத்தில் அன்னாரின் வாழ்நாளிலேயே அன்னாரின் கணவுகளைக் கலைக்கும் விதத்தில் பல்வேறு சாத்தானியர்கள் உருவெடுத்து அன்னாரின் அபாரமிகு ஆளுமைக்கும் அறிவாற்றலுக்கும் ஈடு கொடுக்க முடியாது சிலர் அன்னாரின் தலைமையின் கீழேயே சங்கமிக்க நேர்ந்தது மற்றும் சிலரோ கால ஓட்டத்தின் வேகத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் முகவரியற்றுப் போயினர்.

நமது தேசியத் தலைவர் அவர்களின் மறைவை அடுத்து நம் சமூகத்தின் ஒட்டு மொத்தக் கணவாக இருந்த நமது ஒரேத் தலைமை உரிமை பாதுகாப்பு பொருளாதார மேம்பாடு போன்ற அத்தனையும் கலைந்து செல்ல ஆரம்பித்தன. அதற்க்கான மிக முக்கிய காரணம் அவரால் நமக்குப் பெற்றுத்தரப்பட்ட நமது தேசிய கட்ச்சியாகிய சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில சுயநலமிகளின் தவறான உறவின் மூலம் அது பல குட்டிக் கட்ச்சிகளைப் பிரசவிக்கத் தொடங்கியது. அதனால் ஏற்கனவே அரசியல் ரீதியாக இரு பெரும் பிரிவுகளாக இருந்து வந்த நமது சமூகம் இன்று பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளாகப் பரினமித்துள்ளதைப் பார்கின்றோம்.

எனவே இன்றைய நிலையில் நாம் இந்த நிலைக்கு உடனடியாக முடிவுரை எழுதி முற்றுப்புள்ளி வைக்கத் தவறின் அது பிரசவித்திருக்கும் தவறாகப் பிறந்த அந்தக் குட்டிகளும் இன்னும் பல பேரக் குட்டிகளைப் பிரசவிப்பதனைத் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விடும் என்பது நிதர்சனமாகும்.

அவ்வாறு நமது சமூகம் இன்னும் பல பிரிவுகளாகப் பிரிந்து செல்லும் போது நம் சமூகம் சகல துறையிலும் பலமிளந்து மேலும் மேலும் பலவீனப்பட்டு நலிவுற்ற நாதியற்ற ஒரு சமூகமாக மாறிவிடும் என்பதில் சந்தேகம் கிடையாது.

அல்லாஹ் கூறுகின்றான் : இன்னும் அல்லாஹ்வுக்கும்ää அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். ;.(அல்-குர்ஆன் : 8:46)

இந்த மோசமான பிரிவினைதான்;; நமது கடந்தகால நிகழ்கால எதிர்கால கணவுகள் அத்தனையும் கலைந்து நாம் இன்று நிஜ வாழ்வை அடைந்து கொள்ள முடியாமைக்கான பிரதானமான காரணங்களாக தடைக்கற்க்களாக அமைந்துள்ளன என்றால் அது மறுப்பதற்கில்லை.

எனவே நமது கணவுகள் கலைந்து செல்லாது நினைவாக மலர வேண்டுமாக இருந்தால் நாமனைவரும் நமது அரசியல் வேறுபாடுகள் போலி கௌரவம் போன்ற அத்தனையையும் மறந்து அனைத்து கட்சிகளையும் புறந்தள்ளி தூய்மையானதும் ஆளுமை மிக்கதுமான ஒரேத் தலைமையின் கீழ் உடனடியாக ஓரணி சேர்தல் அவசியமாகும். மட்டுமின்றி இது நமது தாரமீகக் கடமையுமாகும்.

அந்த அணி ஈயத்தால் வார்க்கப்பட்ட அரணைப் போன்று உறுதியாக இருப்பதுவும் மிகவும் அவசியமாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் : எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்றுää அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகின்றார்களோää அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.(அல்-குர்ஆன் : 61:4)

எனவே சமூகத்தின் மீது உண்மையான பற்றும் இறையச்சமும் உள்ள அனைவரும் அல்லாஹ்வுக்காக ஓரணிதிரள்வோமாக. எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கான ஆற்றலையும் தளராத மனவுறுதியையும் சந்தர்ப்ப சூழ்நிலையையும் ஏற்படுத்தித் தருவானாக.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :