அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவ செலவுத் திட்டம் தயாரிப்பது தொடர்பான இரண்டு நாள் வதிவிட செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விருந்தினர் விடுதியில் ஆரம்பமானது.
ஆசிய மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்று வருகின்ற இந்த செயலமர்வில் ஆசிய மன்றத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்,சுதாகரன் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு விரிவுரைகளையும் பயிற்சிகளையும் வழங்கினார்.
இதில் ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரிகளான றிஷாத் ஷரீப், எஸ்.சசிகரன் உள்ளிட்ட அதிகாரிகளும் கல்முனை மாநகர சபையின் கணக்காளர் எச்,எம்.எம்.ரஷீத் உட்பட மேற்படி உள்ளூராட்சி மன்றங்களின் நிதிப் பிரிவு உத்தியோகத்தர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்த செயலமர்வு நாளை புதன்கிழமை மாலை நிறைவுபெறும் என அறிவிக்கப்படுகிறது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment