மோடி தத்தெடுத்த கிராமம்; ஒரு முஸ்லிம் கூட இல்லை!

பிரதமர் மோடி தத்தெடுத்த கிராமத்தில் முஸ்லீம் மதம் உள்ளிட்ட மாற்று மதத்தைச் சேர்ந்தவர் ஒருவர் கூட இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்துக்களின் புனித நகரமான வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று தனது தொகுதிக்குட்பட்ட ஜெயபூர் என்ற கிராமத்தைத் தத்தெடுத்தார்.

அப்போது பேசிய அவர், இந்த கிராமத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எனது இலக்கு. கிராமவாசிகள் தங்கள் திறனை ஒன்றுபடுத்தி செயல்பட வேண்டும். அரசு உதவியை எதிர்பார்த்திருப்பதை விடுத்து களத்தில் இறங்கி கிராமவாசிகள் செயல்பட வேண்டும்.

குழந்தைகளுக்குக் கல்வி அளித்தல், அடிப்படை சுகாதாரத்தை பேணுதல், சுற்றுப்புறத் தூய்மையை குடும்பத்தின் கொள்கையாகக் கொள்வது ஆகியவற்றை உறுதி மொழியாக இந்த கிராமத்தினர் எடுத்து கொள்ள வேண்டும். ஜெயபூர் கிராமத்தோடு இணைந்து செயலாற்றுவது மகிழ்ச்சி. நான் ஜெயபூரின் வளர்ச்சிக்கு உறுதியளிக்கிறேன். தண்ணீர் பஞ்சம் இல்லாத புதிய ஜெயபூரை உருவாக்கிக் காட்டுகிறேன்" என்று கூறினார்.

இதனிடையே, இந்த கிராமத்தில் இந்து மதத்தின் `குர்மி` இனத்தவரைத் தவிர வேற்று மதத்தினர் யாரும் இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. விவசாயத்தை பாரம்பரியமாக செய்து வரும் இந்த குர்மி இனத்தவர்கள் வசிக்கும் ஜெயபூர் கிராமம், 450 ஆண்டுகால வரலாற்றை உடையது என்பதோடு, ஒரு முழுமையான இந்துக்கள் வசிக்கும் கிராமமும் ஆகும்.

இது தொடர்பாக, பாஜகவினர் கூறுகையில், முஸ்லீம்கள் இங்கு வாசிக்காமல் போனது தற்செயலானது. வரும் 2016 ஆம் ஆண்டுக்குள் முன் மாதிரி கிராமமாக ஜெயபூர் உருவாக்கப்படும் என்று தெரிவித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :