சம்மாந்துறை மண்ணுக்கு பாராளுமன்ற பிரநிதித்துவத்தை பெற ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் -மாஹிர்

ம்மாந்துறை மண்ணின் 50 வருடத்திற்கு மேற்பட்ட பாராளுமன்ற பிரநிதித்துவத்தை காப்பாற்றிய வரலாற்றுச் சாதனையாளர்களின் செயற்பாட்டின் இன்னுமொரு வடிவமாக இழந்து நிற்கின்ற பாராளுமன்ற பிரநிதித்துவத்தையும் அரசியல் சாணக்கியத்தையும், ஆளுமையையும் மீண்டும் கட்டியெழுப்பும் வரலாற்றுச் சாதனையாளர்களாக செயற்பட பொது மக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றுமுன் தினம் சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு தொகுதி அரங்கில் இடம்பெற்றது.


இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர்பீட உறுப்பினரும், சவுதி அரேபிய தூதரகத்தின் பொதுசன தொடர்பு அதிகாரி அல் ஹாஜ். ஐ.எல்.எம். மாஹிர் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அல் ஹாஜ். ஐ.எல்.எம். மாஹிர் உரையாற்றுகையில், 

கடந்த காலங்களில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தல்களில் சம்மாந்துறை மண்ணுக்கு பாராளுமன்ற பிரநிதித்துவம் இழக்கப்பட்டமையால் மக்கள் படும் துயரங்களும், அதற்கான இழப்பை நிவர்த்தி செய்வதற்காக எந்த வேட்பாளராக இருந்தாலும், யாராக இருந்தாலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கட்சி பேதமின்றி மக்கள் ஒற்றுமையுடனும், மக்கள் பலத்துடனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற வேட்பாளரை தெரிவு செய்யும் வெற்றிக்கு அனைவரும் ஒற்றுமையுடன் செயலாற்றுவது மக்களின் பொறுப்பாகும்.

அம்பாரை மாவட்டத்தில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு தகுந்த பலம் வாய்ந்த கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே என்பது கடந்த கால வரலாறுகள் எமக்கு தௌிவுபடுத்துகின்றது. என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது சம்மாந்துறை மண்ணின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் கலந்து சிறப்பித்த பொது மக்கள் தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்தனர். சம்மாந்துறை மக்களின் ஒற்றுமையின் அவசியம் பற்றியும் இக் கூட்டத்தில் தௌிவுபடுத்தப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :