கல்முனைக்கு பெருமை சேர்த்த மர்யம் (மரீனா) மன்சூர் நளீமுதீன்!


எம்.வை.அமீர்-

ல்முனை மண்ணில் பிறந்த பலர் பல்வேறுபட்ட துறைகளில் முதன்மை பெற்று இம்மண்ணுக்கு பெருமை சேர்த்துத் தந்துள்ளார்கள். இதில் பெண் முயட்சியாளர்கள், தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றுவது போன்று பல்வேறு துறைகளில் சாதனைகளை படைத்துள்ளனர். 

இந்த வரிசையில் அண்மையில் கல்முனையைப் பிறப்பிடமாக கொண்ட இலங்கை சட்டத்தரணி மர்யம் (மரீனா) மன்சூர் நளீமுதீன் ஆஸ்திரேலியாவில் சட்டத் தொழிலை புரிவதற்காக ஆஸ்திரேலியாநாட்டு பல்கலைகளகத்தினால் (University of Adelaide ) நடாத்தப்படும் அனைத்து ஆஸ்திரேலியா நாட்டுச் சட்டப்பாடங்களிலும் திறமைசித்தி பெற்று அந்நாட்டு உயர்நீதிமன்ற நீதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்ய தகமை பெற்றுள்ளார். இதே சமயம் சட்ட முதுமாணி படிப்பினையும் அந்நாட்டில் இவர்மேல் கொண்டு வருகிறார்.

இவர் கல்முனையைச் செதுக்கிய சிப்பி எம்.எஸ்.காரியப்பரின் பேத்தியும், கல்முனையை அபிவிருத்தி என்ற மழையில் நீராட்டியவரும் முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ஏ. ஆர். மன்சூரின் கனிஷ்ட புதல்வியும் டாக்டர் எஸ்.நளீமுதீனுடைய மனைவியுமாவார்.

இலங்கையில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் மேற்குலகநாட்டில் இவ்வாறான ஒரு தகமையை பெற்று இருப்பது அனைவருக்கும் பெருமை சேர்க்கும் ஒரு விடயமாக இருப்பதுடன் கல்வியில் ஆர்வம் கொண்ட பெண்களுக்கு இவர் ஒரு முன்மாதிரியாகவும் திகழ்கிறார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :