இக்பால் அலி-
ஜனாபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிற்பாடு முஸ்லிம்களுடைய எதிர்ப்பார்ப்பும் முஸ்லிம்களுக்கென ஒழுங்கான அரசியல் தலைமைத்துவமற்ற தவிப்பும் இருந்து கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது.
இதுவரை ஒரு தெளிவான கருத்தை உறுதியுடன் முன்வைக்காமல் சமாளிக்கின்ற கருத்தையே முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர்.
இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையும் ஜனாதிபதியாவதற்கு மஹிந்த ராஜபக்ஷ பகீரதப்பிரயத்தனம் செய்து வருகின்றார்.
அடுத்து இலங்கை அரசியல் வரலாற்றில் பெரிய பூகபம்பைத் ஏற்படுத்தி விட்டு பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்கி இருக்கிறார். அதேவேளை கட்சி தாவல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தச் சூடான சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களுடைய வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்ற முஸ்லிம் அரசியல் பிரமுகர்களுக்கு பாரிய பொறுப்பு தமக்கு இருக்கின்றது என்பதை அவர்கள் முதலில் உணர்ந்து கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றார்கள்.
அவர்கள் விடுக்கின்ற பரப்புரைகள் நெஞ்சு தைரியமற்ற தடு மாற்றத்துடன் விடுக்கும் அறிக்கையைத்தான் காணக் கூடியதாக இருக்கின்றது என்று கல்வி மற்றும் மனித வள அபிருத்தி நிறுவனத்தின் தலைவர் அஷ;nஷய் எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி தெரிவித்தார்அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
இன்று முஸ்லிம்கள் மத்தியில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் எமது முஸ்லிம் தலைவர்கள் அற்ப சொற்ப சலுகைகளுக்கு சமூகத்தைக் காட்டிக் கொடுத்துக் கொண்டு தாம் எந்தப் பக்கம் என்று அடையாளப்படுத்தாமல் சமாளிப்பான அரசியல் அறிக்கைகளை பொது மக்களை திருப்திப்படுத்துவதற்கான அறிக்கைகளை விடுத்து வருகின்றனர். சரியோ பிழையோ அவர்களுக்கு வாக்கு வங்கி உள்ளதோ அல்லது இல்லையோ சரி துணிச்சலுடன் ஹெல உருமயக் கட்சி அவர்களுடைய உண்மையான கொள்கை பொது மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளனர். ஆனால் எமது முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்களோ நேரடியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப் போகின்றோம் என்றோ அல்லது எதிர் தரப்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவிக்கப் போகின்றோம் என்றோ கருத்துக்களை இதுவரை வெளியிடாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
இன்று எமது சமூகம் பல பிரச்சினைகளை நாளாந்தம் எதிர்நோக்கி வருகின்றது. முதலில் பொது பல சேனா என்ற தீய அமைப்பினால் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக எமது சமூகம் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தன. வடபுலத்தில் முஸ்லிம்களுடைய காணிகள் சுவீகரிப்பு, முஸ்லிம்களுடைய பாதுகாப்பு உத்தரவாதம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் முஸ்லிம்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த பிரதான இரு வேட்பாளர்களுடன் கலந்தாலோசித்து ஒரு தீர்க்கமான செய்தியை முஸ்லிம் சமூகத்திற்கு சொல்ல வேண்டி தார்மிகப் பொறுப்பு முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு உண்டு.
வெறுமனே ஊடக அறிக்கைகளால் மக்களை ஏமாற்றும் அறிக்கைகளை விடுத்து தெளிவான உறுதியுடன் ஆதரவு யாருக்கு வழங்க வேண்டும் என்ற தேவை இன்று முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கிறது. எனவே எமது முஸ்லிம் சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரும் நாட்டு நலனுக்குத் தேவையான எந்த ஜனாதிபதி வேட்பாளர் உள்ளாரோ அவர் யார் என்பதை விரைவில் வெளியிடுங்கள். நாங்கள் அவரை ஆதரிக்கவுள்ளோம் என்று கல்வி மற்றும் மனித வள அபிருத்தி நிறுவனத்தின் தலைவர் அஷ;nஷய் எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி மேலும் தெரிவித்தார்.
.jpg)
0 comments :
Post a Comment