மூக்கு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்___யையும் தின்றிருப்பார் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்!

அஷ்ரப் ஏ சமத் -

பொது பல சேனா போன்ற பௌத்த தீவிரவாத அமைப்புக்களுக்கு சாட்டையடி கொடுக்க வேண்டுமானால் -முஸ்லிம்கள் வரிந்துகட்டிக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லாஹ் 28-11-2014 இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தாக இணையதளங்களில் செய்தி வெளியாகி இருந்தது.

பொதுபல சேனா அமைப்பு மகிந்தருக்கு ஆதரவு வழங்குவதாக வெளியிட்டுள்ள செய்தியை அமைச்சர் ஹிஸ்புல்லா சரிகான முயற்சி செய்துள்ளமை ஊடாக ஹிஸ்புல்லாவுக்கு மூக்கு மட்டும் இல்லாவிட்டால் x யையும் தின்பார் என்பதை அவர் வாயாலே ஊருக்கு உலகக்குக்கு அறிவித்துள்ளதாக மேல் மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான எம் எஸ் எம் பைறுஸ் ஹாஜியார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஹிஸ்புல்லா எதற்காக கட்சி மாறினார் எதற்காக மஹிந்தருக்கு xxxxx செல்கிறார் என்பது உலகறிந்த பரகசியம் அதை என்வாயாலும் சொல்லத்தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விட உருவாக்கியுள்ள பொதுபல சேனா அமைப்பு மஹிந்தருக்கு அதரவு வழங்குவதாக உத்தியோக பூர்வமாக அறிவித்தது முதல் திக்குமுக்காடி போயுள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களிடத்தில் இதற்கு ஞாயம் கற்பிக்க காரணம் தேடி ரூம் போட்டு யோசித்துவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர்,

அரசாங்கத்தின் கள்ளக்காதலியாக இருந்த பொதுபல சேனா இப்போது உத்தியோகபூர்வமான மனைவியாகிவிட்டது. கள்ளக்காதலியாக இருந்த போதே பொது பலவை கேள்விகேட்க இவர்களுக்கு நாதி இருக்கவில்லை ஜனாதிபதி தேர்தலை தப்பித்தவரியாவது மஹிந்தர் வெற்றிபெற்றுவிட்டால் பொதுபல போடும் ஆட்டங்களை யாரால் கட்டுப்படுத்தவும். முஸ்லிம்களை உறுதி செய்யும் முன்னர் ஹிஸ்புல்லாஹ் 
முஸ்லிம்களின் ஹலாளுக்கு ,ஹபாயவுக்கு,பள்ளிவாயல்களுக்கு பாதுகாப்பை பெற்றுதரமுடியாத இந்த ஹிஸ்புல்லாஹ் வீதிகளையும் பாதைகளை அபிவிருந்தி செய்வதில் எந்த பயனும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மஹிந்தரை வெற்றிபெற செய்து முஸ்லிம்களை பாதுகாக்க முன்பு அவரின் தலைவர் ரிஷாத்தின் அமைச்சுக்குள் புகுந்து அட்டகாசம் செய்த பொதுபலவிடம் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ளுமாறு ஹிஸ்புல்லாவுக்கு வேண்டுகோள் ஒன்றையும் முன்வைத்துள்ளர்.

மேலும் முஸ்லிம் தலைமைகள் ஊடாக சாபம் வழங்கப்பட்டு பாவிகாளாக போயுள்ள எமது சமூகம் எதிர்வரும் காலங்களில் இதர அமைச்சர்களான ஹகீம் ரிஷாத் பஷீர் ஆகியோர் வாயாலும் என்னென்ன கன்றாவிகளை கேட்கவேண்டியுள்ளதோ எனவும் மேல் மாகாண சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான எம் எஸ் எம் பைறுஸ் ஹாஜியார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :