சுந்தரலிங்கம்-
வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீநாகராஜா வித்தியாலயத்தில் இவ் வருடம்(2014) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 08 மாணவர்கள் சித்தி பெற்றிருந்தனர். இவர்களுக்கான பாராட்டு விழா இன்று(18/09) வித்தியாலய பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தின் கிராம பிரதேச மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுடன், பரீட்சையில் தோற்றிய மாணவர்களும் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையின் அனுசரணையில் இன்றையதினம் கௌரவிக்கப்பட்டனர். கோவில்குளம் இளைஞர் கழகத்தின் செல்வி சுவர்ணா சந்திரகுலசிங்கம் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு இவ் நிகழ்வுகள் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டது.
வித்தியாலய சமூகத்தின் ஒன்றிணைவில் வித்தியாலய அதிபர் திரு சி.வரதராஜா தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவின் பிரதம அதிதியாக வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி நா.மாணிக்கவாசகம், நிகழ்வின் சிறப்பு அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும், கோவில்குளம் இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கௌரவ விருந்தினராக சிதம்பரபுர பிரதேச வைத்தியசாலையின் வைத்தியகலாநிதி எஸ்.சூரியகுமார் அவர்களும் கலந்து இன்றைய நிகழ்வுகளை சிறப்பித்தனர்.
இன்றைய நிகழ்வில் செல்வி யோ.கோகிலா (181) , செல்வன் அ.கோவாஸ் (180), செல்வி அ.யதுசா (174), செல்வி அ.தர்சிகா (173), செல்வி சி.டென்சிகா (172), செல்வன் உ.நிவேதன் (167), செல்வி யோ.நிரோசா (161), செல்வி சி.டிலுசிகா (151) ஆகிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இவ் நிகழ்வில் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் கஜன், நிரோசன், நிகேதன், சஞ்சீவன், காண்டீபன் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment