அகில இலங்கை ஆசிரியர் மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி இம் மாதம் 9 மற்றும்10 ஆம் திகதிகளில் நுவெரலியா நகர சபை மைதானத்தில் நடை பெற்றது.
இதில் அட்டாளைச்சேனையை சேர்ந்த எம். முஹம்மட் அஸ்மி ஆசிரியர் 25-30 வயதுப்பிரிவின் கீழ் 02 தங்கப்பதக்கங்கள், 02 வெள்ளிப்பதக்கங்கள், 01 வெண்கலப்பதக்கம் உட்பட 05 பதக்கங்கள் பெற்று கிழக்கு மாகாணத்திற்கும் , அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கும், தனது ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் 100m , 4*400m போட்டிகளில் தங்கப்பதக்கத்தினையும், 200m, 4*100m போட்டிகளில் வெள்ளிப்பதக்கத்தினையும் , 400m போட்டியில் வெண்கலப்பதக்கத்தினையும் பெற்று கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய பதக்கங்களைப் பெற்றவர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
இவர் பொத்துவில் மத்திய கல்லூரியின் உடற்கல்வி பொறுப்பாசிரியரும் , அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மற்றும் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவருமாவார்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment