சமூகங்களுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் குழுக்களின் ஆதரவு எனக்கு வேண்டாம் -MY3

அஷ்ரப் சமத்-

பொதுபல சேனா அமைப்பு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமது நிலைப்பாட்டை இன்று ஊடகங்களுக்கு அறிவித்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொது பலசேனாவை பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவ்வமைப்பை பேச அழைத்ததாகவும் அந்த அழைப்பை பொதுபல சேனா அமைப்பு நிராகரித்துவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன .

இது தொடர்பாக மைத்ரிபால சிறிசேன அவர்களின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இது முற்றிலும் பொய்யான தகவல் என குறிப்பிட்டுள்ளது.
இந்த நாட்டில் வாழும் உண்மையான பெளத்த மக்களும் சிறுபான்மை மக்களும் பூரண அதரவு வழங்கும் நிலையில் சமூகங்களுக்கு இடையே முருகல்களை ஏற்படுத்தும் குழுக்களின் ஆதரவு தேவையில்லை என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே வேளை அரசில் இருந்து விலகியுள்ள ஹெல உருமய கட்சி பொதுபல சேனா அமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் செய்திகள் பரவராளாக செய்திகள் வெளியாகியிருந்தன இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஹெல உறுமய பொது பல சேனாவின் நடவடிக்கைகளுக்கும் எமக்கும் ஒருபோதும ஒத்துவராது என குறிப்பிட்டுள்ளது .சுமார் பதினான்கு வருடங்களாக அரசியலில் இருக்கும் எமது கட்சி எந்த ஒரு விடயத்தையும் சட்ட ரீதியாகவும் கருத்து ரீதியாகவும் மட்டுமே அணுகியுள்ளது நாம் எப்போதும் சிறுபான்மை மக்களின் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிடவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :