பி. முஹாஜிரீன்-
அக்கரைப்பற்று பிரதேசத்தில் சாராயம் வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதி மன்றத்தினால் ரூபா 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் இன்று (04) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட நபரை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும், மேலதிக நீதவானுமாகிய ஏ.எச்.எம். பசீல் முன்னிலையில் இன்று (04) செவ்வாய்க்கிழமை ஆஜர் செய்தபோதுரூபா 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார்.
இதேவேளை அக்கரைப்பற்று பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்தமை மற்றும் மதுபோதையில் கலகம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரு நபர்களில் கஞ்சா வைத்திருந்த நபருக்கு 30 நாட்களுக்கும் மதுபோதையில் கலகம் விளைவித்த நபருக்கு 15 நாட்களுக்கும் சமூக சேவையில் ஈடுபடுத்துமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும், மேலதிக நீதவானுமாகிய ஏ.எச்.எம். பசீல் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் வியாபாரத்திற்காக கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சகோதரர்கள் இருவருக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதி மன்றத்தினால் ஒவ்வொரவருக்கும் தலா ரூபா 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு 15 நாட்களுக்கு சமூக சேவையில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அம்பாறை குற்றத்தடுப்பு பொலிஸாரினால் வெள்ளிக்கிழமை (31) இவ்விரு நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர். இரு நபர்களையயும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும், மேலதிக நீதவானுமாகிய ஏ.எச்.எம். பசீல் முன்னிலையில் நேற்று (03) திங்கட்கிழமை ஆஜர் செய்தபோது ஒவ்வொரவருக்கும் தலா ரூபா 10 ஆயிரம் அபராதம் விதித்ததோடு 15 நாட்களுக்கு சமூக சேவையில் ஈடுபடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment