சவுதி அரேபியா நாட்டில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
சவுதி அரேபியா நாட்டின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது அல்-ஆஹ்சா மாவட்டம். இது அங்கு வாழும் சிறுபான்மை பிரிவான ஷியா முஸ்லிம்களின் இரு முக்கிய மையங்களில் ஒன்றாகும். இங்குள்ள அல்-டல்வா நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில் இருந்து நேற்று மாலை பொதுமக்களில் சிலர் ஒரு குழுவாக சென்று கொண்டிருந்தனர்.
அவர்களை நோக்கி முகமூடி அணிந்த 3 பேர் தங்களிடம் இருந்த இயந்திர துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் ஆகியவற்றை கொண்டு திடீர் என துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் காயமடைந்தனர் என்று காவல் துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டு பகுதி அருகே நடந்துள்ளதாக கூறப்படும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

0 comments :
Post a Comment