மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 3000 தொடர்மாடி!

அஷ்ரப் ஏ சமத்-

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 3000 தொடர்மாடி வீடுகள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்சவினால் அடுத்த வாரம் திறந்து வைக்கப்பட்டு வீடற்ற 3000 குடும்பங்களுக்கு  கையளிக்கப்பட உள்ளன.

மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் 'யாவருக்கும் வீடு;' என்ற சிந்தனையின் கீழ் கொழும்பில்  70ஆயிரம் வீடுகள் 2020 அமைக்கும் திட்டத்தினை நகர அபிவிருத்தி அதிகார சபையினால்  நிர்மாணிக்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. 2015ஆம் ஆண்டு 15ஆயிரம்  வீடுகள் கொழும்பில் நிர்மாணிக்கப்பட உள்ளன.

கொழும்பு நகரில் தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டுள்ள 5000 வீடுகள் எதிர்வரும் 
டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன் வீடு அற்ற குடும்பங்களுக்கு கையளிக்கப்பட உள்ளன. இத் திட்டம்  பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவின்  மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. 

பின்வரும் வீடமைப்புத் திட்டங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திறந்து வைக்க உள்ளார்.  கொழும்பு – 14 கேணமுல்லயில் 1137 வீடுகள் - நவம்பர் 18ஆம் திகதியும், வீடமைப்பு   அமைச்சினல் நிர்மாணிக்கப்பட்ட மொரட்டுவையில் அங்குலானையில் - 275 வீடுகள்,  கொழும்பு -14 எதிரிசிங்க வத்தையில் 516 வீடுகள் நவம்பர் 21ஆம் திகதியும்,  கொலநாவையில் சாலமுல்லையில் 216 வீடுகள் டிசம்பர் 01ஆம் திகதியும் கொழும்பு 14  போகஸ் வீதியில் 872 வீடுகள் டிசம்பர் 08ஆம் திகதி திறந்து வைக்கப்பட உள்ளன. 

இவ் வீடுகள் 2 படுக்கை அறைகள், பேன்றி, பெல்கனி, மற்றும் சகல அடிப்படைகளும், பொது  மைதாணம், கார் பாக்கிங், வசதிகளும் செய்து கொடுக்கப்பட உள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :