பாலமுனை 2ம் பிரிவு முதியோர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் வைபவம்!

 பி. முஹாஜிரீன்-

2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதியில் முதியோர்களுக்கும் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அன்வர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலமுனை 2ம் பிரிவு முதியோர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் வைபவம் இன்று (07) வெள்ளிக்கிழமை சின்னப்பாலமுனை பல்தேவைக் கட்டடத்தில் நடைபெற்றது. இதில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

பாலமுனை 2ம் பிரிவு கிராம சேவை உத்தியோகத்தர் எம்.எம். பர்வின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச். தம்ஜீத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சமூகசேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அன்வர் தொடர்ந்து தனதுரையில், நாட்டில் வாழும் முதியவர்களுக்கும் விசேட தேவையுள்ளவர்களுக்கும் சமூக சேவைத் திணைக்களம் பல்வேறு வகையான சமூக நலத் திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுத்துள்ளன. முதியோர்களுக்கான கொடுப்பனவு, வைத்தியச் செலவுக்கான கொடுப்பனவு, விசேட தேவையுள்ளவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் போன்ற பல உதவிகளை வழங்கி வருகிறது.

இங்கு வழங்கப்பட்டுள்ள முதியோர் அடையாள அட்டை மூலம் நீங்கள் அலுவலகங்கள், வைத்தியசாலை போன்றவற்றில் முன்னுரிமை அடிப்படையில் தமக்குரிய சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :