காத்தான்குடி பிரதேசத்தில் திவிநெகும பயனாளிகள் 1000 பேருக்கு வீட்டு உபகரணம் வழங்கள்






பழுலுல்லாஹ் பர்ஹான்-

'செழிப்பான இல்லம் 'எனும் தொனிப்பொருளில் திவிநெகும உதவிபெறும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்கான வீட்டு மானிய உதவிகளை வழங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் பணிப்புரைக்கிணங்க பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்;.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஆலோசனைக்கமைய இம் மாவட்டத்தில் சுமார் 59000 திவிநெகும உதவிபெறும் வறிய குடும்பங்களுக்கு இந்த வீட்டு மானிய உதவித் தொகைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய காத்தான்குடி பிரதேசத்தில் 1 கோடி 3 இலட்சம் ரூபாய் நிதியில் ஒரு குடும்பத்திற்கு 2500 ரூபாய் வீதம் சுமார் 5300 திவிநெகும பயனாளிகளுக்கும் வீட்டு மானிய உதவி வழங்கும் திட்டத்தை 23-11-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 1000 குடும்பங்களுக்கு இன்று முதற்கட்ட நிவாரணத்தொகை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பீ.குணரட்ணம்,காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர்,காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சியாட்,பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின்,காத்தான்குடி திவிநெகும முகாமைத்துவப் பணிப்பாளர் ஐ.குணரட்ணம் உட்பட பிரமுகர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இதே வேளை இம் மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள திவிநெகும உதவிபெறும் குடும்பங்களுக்கு வீட்டு மானிய உதவிகள் வழங்கும் பணிகள் பிரதேச செயலகப் பிரிவு வாரியாக தற்போது அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும், உதவி கிடைக்காத திவிநெகும பயனாளிக் குடும்பங்கள் தத்தமது பிரிவு திவிநெகும உத்தியோகத்தர்களை நாடி பெற்றுக்கொள்ளுமாறு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுக்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :