3 காரணங்களை சுட்டிக்காட்டி நவீன் திசாநாயக்க விலகினார்!

மது தந்தையான காலஞ்சென்ற காமினி திசாநாயக்கவின் பயணப்பாதையில் தாம் எதிர்காலத்தில் பயணிக்கவுள்ளதாக தமது அமைச்சுப் பதவியிலிருந்து விலகிய நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சியில் தாம் வகித்த நுவரெலிய மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்தும், அரச முகாமைத்துவம் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சுப் பதவிலியிருந்தும், அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவிலிருந்தும் இன்று விலகினார்.

எதிர்காலத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க தாம் தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

தமது பதவி விலகல் கடிதத்தை அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று கையளித்துள்ளார்.

அந்த கடிதத்தில் தாம் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான 3 காரணங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது விலகல் தீர்மானத்தை அடுத்து செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த நவீன திசாநாயக்க, தாம் கடந்த ஒன்றரை வருட காலமாக இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து வந்தாக தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்;டத்தில் கிராமிய மட்டத்தில் மக்களுக்கான அபிவிருத்திகள் மற்றும் வளங்கள் மிகவும் குறைவாகவே கிடைக்கப் பெற்றன.

ஆனால் அதற்கு எந்தவிதத்திலும் சரியான தீர்வு கிடைக்கப் பெறவில்லை என்பது முதல் காரணம்.

அடுத்து ஜனாதிபதி முறைமை தொடர்பாக தந்தை கொண்டிருந்த நிலைப்பாட்டையே கடைபிடிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

எனவே, அனைவரும் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை கடைபிடிக்கவுள்ளதாக பொதுவேட்பாளருக்கே ஆதரவளிக்க தயாராகவுள்ளதாகவும் முன்னாள் அரச முகாமைத்துவம் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திசாநாயக்க எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :