பேதங்கள் அனைத்தையும் புறந்தள்ளி அனைவரும் ஒன்றினைவோம் -ஜெமீல் MPC

அஸ்லம் எஸ்.மௌலானா-

பேதங்கள் அனைத்தையும் புறந்தள்ளி முஸ்லிம்கள் அனைவரும் சமூக நோக்கத்திற்காக ஒன்றினைவதற்கும் பிற சமூகங்களுடன் சகோதரத்துவம் பேணி வாழ்வதற்கும் இப்புனிதத் திருநாளில் திடசங்கற்பம் பூணுவோம் என்று கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"உலகின் எட்டுத் திசைகளில் இருந்தும் பல லட்சம் முஸ்லிம்கள் புனித மக்காவில் ஒன்றுகூடி நிறைவேற்றுகின்ற ஹஜ் கடமையானது நமக்கு பல்வேறு படிப்பினைகளைப் போதிக்கின்றது.

தியாகம், சகிப்புத் தன்மை, சமத்துவம், ஒற்றுமை போன்ற சிறப்பம்சங்கள் அவற்றுள் மிக முக்கியமானவையாகும். இந்த சிறப்பம்சங்களும் நற்குணங்களும் நமது அன்றாட வாழ்வில் நிலைத்து நிற்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய பண்புகளை ஒவ்வொரு தனி மனிதனும் கடைப்பிடித்து ஒழுகும்போது சமூக கட்டமைப்பிலும் நாட்டிலும் முழு உலகத்திலும் வீண் பிணக்குகள் ஏற்பட வாய்ப்பிருக்காது.

நமது இஸ்லாம் மார்க்கம் போதிக்கும் இத்தகைய பண்புகளை முஸ்லிம்கள் கடைப்பிடித்து பிற மதத்தினருக்கு முன்மாதிரியாக திகழ்வதன் மூலம் அன்னியரின் நெருக்குவாரங்களில் இருந்து நாம் விடுபடவும் அவர்களது சூழ்ச்சிகளை முறியடிக்கவும் முஸ்லிம் சமூகம் தலை நிமிர்ந்து நிற்கவும் இஸ்லாம் எழுச்சி பெறவும் வாய்ப்பேற்படும்.

இன்று எமது நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் முஸ்லிம் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள் மற்றும் சமூக இருப்புக்கான அச்சுறுத்தல்கள் மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகள் போன்ற அத்தனை பிரச்சினைகளும் எமது சமூகம் பிளவடைந்ததன் எதிரொலியாகவே தலை தூக்கியுள்ளன என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே இன்றைய ஈகைத் திரு நாளில் முஸ்லிம்கள் அனைவரும் இத்தகைய உயர் பண்புகளைப் பேணி, தமக்குள் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்பி,ஒரு பலமிக்க சமூகமாக திகழ்வதற்கு உறுதி பூணுவோம் அழைப்பு விடுப்பதுடன் பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

-ஈத்முபாரக்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :